Instagram: 100 மில்லியன் பின்தொடர்பவர்கள் கொண்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலில் விராட் கோலி

Tue, 02 Mar 2021-8:18 pm,

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் 260 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு நட்சத்திரம். போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ரொனால்டோ, Juventus அணியைச் சேர்ந்தவர் என்றாலும், இதற்கு முன்னதாக மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) மற்றும் ரியல் மாட்ரிட் (Real Madrid) அணிக்காக விளையாடியவர். சமூக ஊடகங்களில் ரொனால்டோ ஒரு பதிவு இட்டால், அவருக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா?  சுமார் 9.15 கோடி ரூபாய்.

(Source: Twitter)

WWE சூப்பர் ஸ்டார் மற்றும் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ டுவைன் 'தி ராக்' ஜான்சன் இன்ஸ்டாகிராமில் 220 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். அதிக வருமானம் ஈட்டிய ஹாலிவுட் நடிகர்களில் ஒருவரான தி ராக், சமூக ஊடகங்களில் இடும் ஒரு பதிவுக்கு சுமார் 7.45 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.  (Source: Twitter)

இன்ஸ்டாகிராமில் 147 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் பிரேசில் கால்பந்து வீரரும் முன்னாள் பார்சிலோனா அணியின் வீரருமான நெய்மர் மூன்றாவது இடத்தில் உள்ளார். பாரிஸ்-செயிண்ட் ஜெர்மைன் அணியின் வீரர் சமூக ஊடகங்களில் இடும் ஒரு பதிவுக்கு 5.16 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்

(Source: Twitter)

நீண்டகால போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பின்னால் 186 மில்லியனுடன் லியோனல் மெஸ்ஸி இன்ஸ்டாகிராமில் பிரபலமான கால்பந்து வீரராக உள்ளார். சமூக ஊடகப் பதிவுகளின் அடிப்படையில் மெஸ்ஸி அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களில் இரண்டாவது இடத்தை பிடிக்கிறார். அவர் இடும் ஒரு பதிவுக்கு சுமார் 6.5 கோடி ரூபாய் கிடைக்கும். 

(Source: Twitter)

இந்திய கேப்டன் விராட் கோஹ்லி இப்போது இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார் - உலகில் எந்த கிரிக்கெட் வீரருக்கும் இந்த அளவு பின் தொடர்பவர்கள் இல்லை.   இன்ஸ்டாகிராமில் ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுகள் மூலம் உலகின் அதிக வருமானம் ஈட்டிய 10 விளையாட்டு வீரர்களில் கோஹ்லி மட்டுமே கிரிக்கெட் வீரர் ஆவார். (Source: Twitter)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link