சச்சினை வலிக்காமல் அடிக்கும் கோலி - அடுத்த சாதனையையும் தகர்த்தார்
ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இருந்தார்.
அவரின் சாதனையை நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் முறியடித்தார் விராட் கோலி.
சச்சின் 2003 ஆம் ஆண்டு உலக கோப்பையில் 673 ரன்கள் எடுத்திருந்தார். இதுவே ஒரு வீரர் ஒரு உலக கோப்பையில் எடுத்த அதிக ரன்களாக இருந்தது.
11 இன்னிங்ஸில் சச்சின் எடுத்த இந்த ரன்களை 10 இன்னிங்ஸிலேயே விராட்கோலி முறியடித்துள்ளார். 675 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார்.
முதல் இடத்தில் விராட் கோலி, இரண்டாவது இடத்தில் சச்சின், 659 ரன்களுடன் மேத்யூ ஹைடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.
648 ரன்களுடன் ரோகித் சர்மா நான்காவது இடத்திலும் 647 ரன்களுடன் டேவிட் வார்னர் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
அத்துடன் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் விராட் கோலி.