ரோஹித், விராட் இல்லை... துலிப் டிராபி அணிகள் அறிவிப்பு - யார் யாருக்கு வாய்ப்பு பாருங்க?

Wed, 14 Aug 2024-5:27 pm,

துலிப் டிராபி 2025 தொடர், இந்தாண்டு 4 அணிகளுடன் விளையாடப்படுகிறது. வரும் செப். 5ஆம் தேதி தொடங்கிறது.  

 

இந்த தொடரில் ஒரு அணி மற்ற மூன்று அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இந்த தொடரில் நாக்-அவுட் சுற்று கிடையாது. 

 

தொடரின் முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். கடந்த முறை 6 அணிகளுடன் இந்த துலிப் டிராபி தொடர் நடைபெற்றது. இதில் தென் மண்டலம் அணி வெற்றி பெற்றிருந்தது.

 

இந்நிலையில், துலிப் டிராபி தொடருக்கான ஏ அணி, பி அணி, சி அணி, டி அணி ஆகிய நான்கு அணிகளுக்கும் தலா 15  வீரர்கள் கொண்ட ஸ்குவாடை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.  

 

ஏ அணி: சுப்மான் கில் (கேப்டன்), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஷிவம் துபே, தனுஷ் கோட்டியன், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, ஆவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா, ஷாஸ்வத் ராவத்.

 

பி அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர் சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி , என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்). இதில் நிதிஷ் குமார் ரெட்டியின் உடற்தகுதியை பொறுத்தே அவர் அணிக்குள் சேர்க்கப்படுவாரா என்பது முடிவாகும். 

 

சி அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், பி இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், உம்ரான் மாலிக், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே, ஆர்யன் ஜூயல் (விக்கெட் கீப்பர்), சந்தீப் வாரியர்.

 

டி அணி: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, கே.எஸ்.  பரத் (விக்கெட் கீப்பர்), சௌரப் குமார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link