ஒருவழியாக 5ஜியை அறிமுகப்படுத்திய வோடபோன் ஐடியா! என்ன சிறப்பம்சங்கள்?

Tue, 17 Dec 2024-1:13 pm,

இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை நீண்ட நாட்களாக வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு 5ஜி சேவைகளை வோடபோன் ஐடியா பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. 3.3GHz மற்றும் 26GHz ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.

நீண்ட நாட்களாக இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வோடபோன் ஐடியா தனது 5G சேவைகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக இந்தியாவில் 17 மாநிலங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பே ஏர்டெல் மற்றும் ஜியோ 5G சேவையை கொடுத்து வருகிறது.

வோடபோன் ஐடியா பயனர்களுக்கு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. ப்ரீபெய்டு 5ஜி சேவை ரூ.475 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு REDX 1101 என்ற திட்டம் பயன்பாட்டில் உள்ளது.

 

தற்போது, ​​குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வோடபோன் ஐடியா 5G சேவையை பயன்படுத்த முடியும். வரும் காலங்களில் தனது சேவையை விரிவுபடுத்த திட்டம் வைத்துள்ளனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link