ஜியோவே மிரளும் வோடாஃபோன் ஐடியாவின் சூப்பர் ஓடிடி பிளான்..! 154 ரூபாய் போதும்
டேட்டா திட்டங்களில் ஓடிடி ஆப்களின் சந்தா மட்டுமல்லாமல், லைவ் டிவி சேனல்களின் சந்தாவையும் டெலிகாம் நிறுவனங்கள் கொடுக்க தொடங்கிவிட்டன. இதனால் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களிடையே ஓடிடி சந்தா கொடுப்பதில் கடும் போட்டியே தொடங்கிவிட்டது. இப்போது, ஜியோவுக்கு நிகராக வோடபோன் நிறுவனம் மாதாந்திர திட்டங்களை களமிறங்கி இருக்கிறது.
அதாவது, விஐ மூவிஸ் மற்றும் டிவி திட்டம் (Vi Movies And TV Plan) மூலம் டேட்டா மட்டுமல்லாமல், 16 ஓடிடி ஆப்களின் சந்தா மற்றும் 400+ லைவ் டிவி சேனல்களின் சந்தாவையும் மலிவான விலைக்கு கொடுத்து வருகிறது. இப்போது, ஜீ5 ஓடிடி தளத்தின் சந்தாவையும் புதிதாக இணைத்திருக்கிறது. ரூ.154, ரூ.202 மற்றும் ரூ.248 விலையில் திட்டங்கள் வருகின்றன.
விஐ மூவிஸ் & டிவி ரூ 154 திட்ட விவரங்கள் (Vi Movies & TV Rs 154 Plan Details): இதுவொரு விஐஎம்டிவி லைட் (ViMTV Lite) திட்டமாகும். இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டா மற்றும் 16 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. அதேபோல 400+ லைவ் டிவி சேனல்களின் சந்தாவும் கிடைக்கிறது. இந்த சலுகைகளை மொபைலில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
டிவியிலும் இந்த சலுகைகள் வேண்டுமானால், இதற்கு அடுத்த விலையில் கிடைக்கும் திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். இப்போது, இந்த லைட் திட்டத்தின் ஓடிடி ஆப்களை பார்ப்போம். ஜீ5, சோனிலிவ், ஃபேன்கோட், பிளேஃபிளிக்ஸ், உல்லு, கிளிக், அட்ரங்கீ, மனோரமா மேக்ஸ், சாவ்பால், நம்மஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஆப்களை பயன்படுத்தலாம்.
மேலும், டிஸ்ட்ரோ டிவி, ஷீமாரூமீ, ஹங்கமா, யூப்டிவி, நெக்ஸ்ஜிடிவி, பாக்கெட்பிலிம்ஸ் ஆகிய ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் விஐ மூவிஸ் & டிவி மூலம் இந்த மொத்த சலுகைகளையும் பெற்று கொள்ளலாம். இப்போது மொபைல் + டிவி சலுகைகளை கொடுக்கும் திட்டத்தை பார்ப்போம்.
விஐ மூவிஸ் & டிவி ரூ 202 திட்ட விவரங்கள் (Vi Movies & TV Rs 202 Plan Details): இதுவொரு விஐஎம்டிவி ப்ரோ (ViMTV Pro) திட்டமாகும். இந்த திட்டத்தில் 13+ ஓடிடி ஆப்கள் மற்றும் 400+ டிவி சேனல்கள் சலுகை கிடைக்கிறது. அதேபோல 5 ஜிபி டேட்டா சலுகையையும் பெற்று கொள்ளலாம். டிவி மற்றும் மொபைலில் இந்த சலுகைகளை பெற்று கொள்ள முடியும்.
ஓடிடி ஆப்களை பொறுத்தவரை, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், பேன்கோட், பிளேஃபிளிக்ஸ், மனோரமா மேக்ஸ், கிளிக், சாவ்பால், நம்மஃபிளிக்ஸ், டிஸ்ட்ரோ டிவி, ஷீமாரூமி, ஹங்கமா, யூப்டிவி, நெக்ஸ்ஜிடிவி, பாக்கெட் ஃபிலிம்ஸ் ஆகியவை வருகின்றன. இதைவிட கூடுதல் ஓடிடி கொண்ட திட்டம் இருக்கிறது.
விஐ மூவிஸ் & டிவி ரூ 248 திட்ட விவரங்கள் (Vi Movies & TV Rs 248 Plan Details): இதுவொரு விஐஎம்டிவி பிளஸ் (ViMTV Plus) திட்டமாகும். இந்த திட்டத்தில் 6 ஜிபி டேட்டா வருகிறது. முந்தைய திட்டங்களை போலவே 400+ டிவி சேனல்கள் கிடைக்கிறது. 17 ஓடிடிகளை பயன்படுத்தலாம். முதல் திட்டத்தின் ஓடிடி சலுகைகள் மற்றும் ஹாட்ஸ்டார் ஓடிடி கூடுதலாக வருகிறது.