ரூ. 171 கோடி மதிப்புள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடு! வெளியான புகைப்படங்கள்!

Thu, 19 Sep 2024-1:02 pm,

சமீபத்தில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆவேன் என்று கூறியுள்ளார்.

 

தற்போது டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி மர்லினா பொறுப்பேற்றுள்ளார். 11 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஒரு பெண் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.   

 

அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது டெல்லியில் தனது குடும்பத்தினருடன் அரசு இல்லத்தில் வசித்து வருகிறார். டெல்லியின் முக்கிய பகுதியில் இந்த இல்லம் அமைத்துள்ளது. 

 

வீட்டை சுற்றி மரங்கள், புல்வெளி, சுத்தமான காற்று என இந்த வீடு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. இந்த வீட்டை புதுப்பிப்பதற்கு செலவிடப்பட்ட தொகை சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியது.

 

இரண்டு மாடி கட்டிடம் கொண்ட இந்த வீட்டில் மேல் தளம் வாசிப்பதற்கும், கீழ் தளம் அலுவலக வேலைகளை செய்வதற்கும் ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

 

வீட்டின் மேல் தளத்தில் நிறைய தங்கும் அறைகள் உள்ளன. இந்த வீட்டை புதுப்பிக்க 45 கோடி ரூபாய் செலவானது என்று கூறப்பட்டது. ஆனால் இதன் உண்மையான மதிப்பு 171 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link