சதயத்தில் மாறிய சனி பகவானால் இந்த ராசிகளுக்கு இனி ராஜயோகம்: பொற்காலம் தொடங்கும்
மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் செய்ய இது நல்ல காலமாக இருக்கும். ஏற்கனவே தொழில் செய்து வருபவர்கள் பொருளாதார ரீதியாக லாபம் அடைவார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு பணக்கார யோகம் உருவாகும். இந்த பெயர்ச்சியின் காரணத்தால் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் மகாபாக்ய ராஜயோகம் உருவாகும். இது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான மற்றும் நல்ல பலன்களை அளிக்கும். ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் பெரிய சாதனைகளைச் செய்வார்கள். இந்த காலத்தில் இவர்களுக்கு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பண வரவு ஆகியவை கிடைக்கும். திருமணத்துக்காக காத்திருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்போது திருமணம் நிச்சயம் ஆகலாம்.
மிதுன ராசிக்காரர்கள் வாய்ப்புகளை நழுவ விடாமல் கடினமாக உழைக்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாகப் படிப்பு, வேலை தொடர்பான கனவில் இருப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நட்சத்திரத்தில் ஏற்படும் மாற்றம் சிறப்பான பலன்களைத் தரும். பண வகையில் பல நன்மைகள் உண்டாகும். சதய நட்சத்திரத்தில் சனி இருப்பது இடமாற்றம், வெற்றி மற்றும் வேலையில் வெற்றிகளை கிடைக்கச்செய்யும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார லாபம் உண்டாகும்.
வியாபாரம் செய்யும் துலா ராசிக்காரர்களுக்கு பொருளாதார லாபம் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்காக குறுக்குவழிகளை கடைபிடிக்காதீர்கள். இழப்புக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன, ஆகையால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சனியின் நட்சத்திர மாற்றத்தால் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். இடமாற்றம் மற்றும் சம்பள உயர்வும் கூடும். அனைத்து துறைகளிலும் வெற்றி உங்களைத் தேடி வரும். இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும்.
சனி நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் தொடங்கும் வேலை நீண்ட கால பலனைத் தரும். சனிபகவான் சதய நட்சத்திரத்துக்கு பெயர்ச்சி ஆவதால், வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும்.