Weekly Astro Prediction: மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார அதிர்ஷ்ட ராசிகளும்... பரிகாரங்களும்

Sun, 05 Jan 2025-12:50 pm,

மேஷ ராசிக்கான வார பலன்கள்: நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். எனினும் சோம்பேறித்தனத்தை கைவிடுவது நல்லது நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சிவனை வழிபடுவதும், சிவாஷ்டகம் பாராயணம் செய்வதும் மேஷ ராசிக்கான சிறந்த பரிகாரமாக இருக்கும்.

 

ரிஷப ராசிக்கான வார பலன்கள்: வேலையில் சில திடீர் தடைகள் வரலாம். எதிர்பார்த்தபடி பணிகள் நடைபெறாவிட்டால் ஏமாற்றம் அடையலாம். எனினும் தோல்வி கண்டு துவளக் கூடாது. ஒருங்கிணைந்த செயல்பட்டால் அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிக்கலாம். தேவையற்ற செலவுகளை தவிர்த்து, திட்டமிட்டு சேமிப்பதால் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும். துர்க்கை அம்மனை வழிபடுவதும் தினமும் அனுமன் சாலிசா பாராயணம் செய்வதும் நல்ல பலனை கொடுக்கும்.

 

மிதுன ராசிக்கான வார பலன்கள்: பணியிடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுக்கு எதிராக சதி திட்டம் தீட்டப் படலாம். பருவ கால நோய்கள் தாக்கும் வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையாக இருக்கவும். செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நிதி நிலைமை மேம்படும் வாய்ப்பு உண்டு. சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கும் போதிலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். விநாயகப் பெருமானை வழிபடுவதும், புதன்கிழமை பசுவிற்கு தீவனம் கொடுப்பதும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

கடக ராசிக்கான வார பலன்கள்: உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய தேவை இருக்கும். உறவுகளை பராமரிக்க உங்களால் இயன்றவரை முயற்சி செய்வது நல்லது. நிதி ரீதியாக வலுவான நிலையில் இருப்பீர்கள். எனினும் செலவு சிறிது அதிகமாக இருக்கலாம். பணப்பரிவர்த்தனையின் போது கவனம் தேவை. கடன் கொடுப்பதை முடிந்த அளவு தவிர்க்கவும். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதும் சிவ மகிமை ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதும் உங்களுக்கான சிறந்த பரிகாரமாக இருக்கும்.

சிம்ம ராசிக்கான வார பலன்கள்: வேலையில் தொழிலில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் அனைவரின் ஒத்துழைப்பையும் பெறலாம். திட்டமிட்டபடி வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். வேலை நிமித்தமாக பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். கட்டிடம் தொடர்பாக சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும். சூரியனுக்கு அர்ஜியம் வழங்கி வழிபடுவதும், சூர்யா அஷ்டகம் பாராயணம் செய்வதும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

கன்னி ராசிக்கான வார பலன்கள்: திட்டமிட்ட பணிகளில் விரும்பிய வெற்றி கிடைக்கும். பொழுதுபோக்கிற்காக நேரம் செலவிடுவீர்கள். உறவினர்களுடன் சுற்றுலா அல்லது விருந்துகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியமும் நன்றாகவே இருக்கும். துர்க்கை அம்மனை வழிபடுவதும், புதன்கிழமை அன்று பச்சை நிற வஸ்திரத்தை சாற்றி வழிபடுவதும், உங்களுக்கான சிறந்த பரிகாரமாக இருக்கும்.

துலாம் ராசிக்கான வார பலன்கள்: வேலைகளில் திட்டமிட்டபடி வெற்றி பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணி மேலதிகாரிகளால் பாராட்டப்படும். பதவி உயர்வு சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். ஸ்படிகத்தால் செய்யப்பட்ட ஸ்ரீ எந்திரத்தை வணங்குவதும் மகாலட்சுமி அஷ்டோத்திரம் பாராயணம் செய்வதும் பலன் தரும்.

விருச்சிக ராசிக்கான வார பலன்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் அழுத்தம் அதிகமாக இருக்கும். இலக்கை அடைவதில் சமங்களை சந்திக்க வேண்டி இருக்கும். பயணங்கள் எதிர்பார்த்த பலன்களை கொடுக்காமல் மனதில் ஏமாற்றம் ஏற்படும். பண பரிவர்த்தனை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். உடல் நிலையிலும் கவனம் தேவை. பகவான் அனுமனை வழிபடுவதும், சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதும் சிறந்த பரிகாரங்களாக இருக்கும்.

 

தனுசு ராசிக்கான வார பலன்கள்: அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். பணியை முடிக்க கூடுதல் உழைப்பு முயற்சியும் தேவைப்படலாம். உங்கள் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நிதி விவகாரங்களிலும் தடைகளையும் சிக்கல்களையும் சந்திக்க நேரிடலாம். மானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது, உங்களுக்கான சிறந்த பரிகாரமாக இருக்கும்.

 

மகர ராசிக்கான வார பலன்கள்: மனதில் எதிர்பார்க்கும் விஷயங்கள் நிறைவேறும் வாய்ப்பு உண்டு.. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதிர்பாராத லாபம் மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும். ஆடம்பர விஷயங்களில் பணம் செலவழிக்க நேரிடும். தினமும் அனுமன் சாலிசா பாராயணம் செய்வதும், கோளறு பதிகம் பாராயணம் செய்வதும் நல்ல பலனை கொடுக்கும்.

கும்ப ராசிக்கான வார பலன்கள்: நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டில் உயர்கல்வி அல்ல வேலை செய்ய விரும்புபவர்களின் முயற்சி வெற்றி பெறும். பணியில் இருப்பவர்களின் வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முதலீட்டில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். விநாயகப் பெருமானை வழிபடுவதும், விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும் நல்ல பலனை கொடுக்கும்.

மீன ராசிக்கான வார பலன்கள்: நல்ல அதிர்ஷ்டம் உங்களுக்காக காத்திருக்கிறது. எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சில நாட்களாக இருந்து வந்த சோம்பல், சுறுசுறுப்பின்மை நீங்கி வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கடின உழைப்பிற்கான பலனும் நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஸ்ரீ ராம பெருமானை வணங்குவதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், எதிர்பார்த்த பலன்களை அள்ளிக் கொடுக்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link