ஜூன் 17- 23 வார ராசிபலன்! திடீர் பணவரவால் மகிழ்ச்சியடையும் ராசிக்காரர் நீங்களா?

Fri, 14 Jun 2024-8:15 pm,

ஜூன் மூன்றாவது வார ராசிபலன் கணிப்பின்படி, 4 ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்று தெரிகிறது. வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும், சமூகத்தில் மரியாதை கிடைக்கும். எதிர்பாராத தகவல்கள் கிடைக்கலாம். 3 ராசிக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றால், மீதமுள்ள ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கலவையான பலன்களைத் தரும். மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு 2024 ஜூன் 17 முதல் 23 வரையில் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புக் கிடைக்கும், மனப்பக்குவம் உண்டாகும். பிறரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள்

மகிழ்ச்சியான மனோநிலை நீடிக்கும், இதற்கு காரணம் தடைபட்ட சில பணிகளை செய்து முடிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதாக இருக்கலாம். உடன் பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். உறவினர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும். குடும்பத்தினரின் ஆலோசனைகளால் மனதில் மாற்றம் ஏற்படும்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நேரம் இது. குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து செயல்பட்டால் நல்லது. சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது, காரியத்தடைகள் குறையும். சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். 

வாக்குறுதிகளை அளிப்பதற்கு முன்னதாக அவற்றை நிறைவேற்ற முடியுமா என்பதை சிந்தித்து கொடுக்கவும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்பாடுகளால் லாபம் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்புடன் புதிய திட்டத்தை செயல்படுத்தலாம்

இழுபறியான சூழ்நிலைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்குமான புரிதல் அதிகரிக்கும் காலம் இது. குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

விவேகத்துடன் செயல்பட்டால் நன்மைகள் நடக்கும் என்பதைப் புரிந்துக் கொள்ளவும். எளிதில் முடிய வேண்டிய வேலைகள் கூட அலைச்சல்களுக்கு பின்பு முடியும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் கவலைகளை ஏற்படுத்தும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும்

கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதளவில் தெளிவு பிறக்கும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது

உற்சாகத்தோடு செயல்படும் நேரம் இது, ஏனென்றால் விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். தொழில் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்வது, வீடு மாற்றம் என பல சிந்தனைகளால் மனம் குழம்பும். புதிய கண்ணோட்டம் பிறக்கும்

ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பணிகள் சாதகமாக முடியும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. 

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதை உறுத்திய  சில கவலைகள் மறையும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதற்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்பதை உணர்வீர்கள்

மனதளவில் சோர்வு ஏற்படும், மனதில் குழப்பம் தோன்றும். பணிகளில் அனுகூலமற்ற சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும்

இழந்த பொருட்களை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கேற்ப திட்டமிடவும். எதிர்பார்த்த லாபமும் வருமானமும் கிடைக்கும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link