வார ராசிபலன் ஜூன் 24-30! வாழ்க்கை ஜாலியானது என குதூகலிக்கும் 4 ராசிக்காரர்கள்!
புத ஆதித்ய ராஜயோகம் உள்ளிட்ட கிரக நிலைகள் காரணமாக, மேஷம் சிம்மம் உள்ளிட்ட நான்கு ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும் வாரம் இது...
செயல்களில் மந்த தன்மை விலகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும், அரசாங்கத் தரப்பில் ஆதரவுகள் அதிகரிக்கும். நெருக்கடி கொடுத்தவர்கள் விலகி செல்வார்கள். வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும்.
வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. வேலையில் சில நெருக்கடிகள் தோன்றி மறையும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் நடைபெறும். சகோதரர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் அகலும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.
மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம்.
உறவினர்களை சந்தித்து மகிழலாம். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான செயல் திட்டங்களை உருவாக்கும் வாய்ப்பு உருவாகும்
நினைத்த பணிகள் எதிர்பார்த்த விதத்தில் முடியும். தந்தை வழியில் ஆதரவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவுகளுடன் சுமுகமான சூழல்கள் அமையும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். தடைப்பட்டு வந்த வரவுகள் கிடைக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு பண வரத்து இயல்பாகும். சிந்தனைகளில் குழப்பங்கள் ஏற்படும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாறுபட்ட சுழல்கள் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் பொறுமை வேண்டும்.
அலைச்சல்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் ஏற்படும் மாற்றங்களால், எதிலும் விருப்பம் இருக்காது, மன அழுத்தம் ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும், குழப்பம் அதிகரிக்கும்.
குழந்தைகளால் நிம்மதி ஏற்படும், அவர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வியாபார போட்டிகளில் வெற்றி கொள்வீர்கள். நிம்மதியான காலம் வந்துவிட்டது என்ற நம்பிக்கை உருவாகும்
உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். பொறுமையுடன் செயல்படவும், நிதானமாக இருப்பது நல்லது என்பதைப் புரிந்துக் கொள்ளவும்
பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். சேமிப்பை பெருக்குவதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம் என்பதால், வார்த்தைகளில் கவனம் அவசியம்.