Weight Loss Diet: உடல் எடையை குறைக்க உதவும் 5 உணவுகள்!
சீரகம் பொதுவாக அனைவரது வீட்டிலும் இருக்கும், குறைந்த கலோரிகள் கொண்ட இந்த சீராக தண்ணீர் செரிமானத்தை ஊக்குவித்து வயிற்று பகுதிகளில் கொழுப்புகள் படிவத்தை தடுக்கிறது. இது உடல் எடையை குறைக்க சிறந்த பானமாக கருதப்படுகிறது.
உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர் அவர்களது டயட்டில் கிரீன் டீயை சேர்த்து கொள்கின்றனர், இது நமது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து எடை இழப்புக்கு உதவுகிறது. இந்த டீயில் இனிப்பு சேர்க்காமல் குடிப்பது கூடுதல் பலனை தரும்.
ஓமம் உங்கள் உடலிலுள்ள கொழுப்புக்களை கரைக்கும் வித்தையை செய்கிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து செரிமான மண்டலத்தை தூண்டுகிறது. 2 டீஸ்பூன் ஓமத்தை வறுத்து இரவில் நீரில் ஊறவைத்து மறுநாள் அதனை பருக உடல் எடை குறையும்.
டீடாக்ஸ் நீர் குடிப்பது உடலில் உள்ள கேட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை மளமளவென குறைக்கிறது. வெள்ளரிக்காய், எலுமிச்சை மற்றும் புதினா இலைகள் சேர்த்து இந்த நீரை தயாரிக்க வேண்டும், மேலும் கூடுதல் சுவைக்காக இதில் ஆப்பிள் மற்றும் இஞ்சி சேர்த்துக்கொள்ளலாம்.
சீரகத்தை போலவே சோம்பு பல வீடுகளிலும் இருக்கும். முதல் நாள் இரவு சோம்பை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அதனை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க உடல் எடை குறையும்.