Weight Loss Diet: இந்த 5 இயற்கை பானங்களை குடித்தால் போதும்! உடல் எடையை குறைக்கலாம்!

Mon, 01 Aug 2022-1:23 pm,

இந்திய உணவுகளில் அதிகளவில் சீரகம் பயன்படுத்தப்படுகிறது, குறைந்த கலோரிகள் கொண்ட இந்த சீராக தண்ணீர் செரிமானத்தை ஊக்குவித்து வயிற்று பகுதிகளில் கொழுப்புகள் படிவத்தை தடுக்கிறது.  இது பசியை கட்டுப்படுத்தி, எடை இழப்புக்கு உதவுகிறது.

 

உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர் அவர்களது டயட்டில் கிரீன் டீயை சேர்த்து கொள்கின்றனர், இது நமது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து எடை இழப்புக்கு உதவுகிறது.  இந்த டீயில் இனிப்பு சேர்க்காமல் குடிப்பது கூடுதல் பலனை தரும்.

 

ஓமம் பொதுவாக நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது செரிமான மண்டலத்தை சுறுசுறுப்பாக இயங்க செய்கிறது.  2 டீஸ்பூன் ஓமத்தை இரவில் நீரில் ஊறவைத்து மறுநாள் அதனை பருக உடல் எடை குறையும்.

 

வயிறு உப்புசம் மற்றும் செரிமானத்திற்கு சோம்பு பயன்படுத்தப்படுகிறது, முதல் நாள் இரவு சோம்பை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அதனை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.  இது பாடியை டீடாக்ஸ் செய்து உடல் எடையை குறைக்கிறது.

 

தண்ணீரை போன்றதொரு சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை, இது ஒட்டுமொத்த உடலுக்கு நன்மை தருகிறது.  உணவு உண்பதற்கு முன்னர் தண்ணீர் குடிப்பது உங்களை குறைவான உணவை உட்கொள்ள வைப்பதோடு தேவையற்ற கலோரிகளையும் எரிக்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link