முகத்தில் அதிக கொழுப்பா? இந்த முறையில் எளிதாக குறைக்கலாம்!
உதட்டை குவித்து மீன் முகம் போன்று முகத்தை வைக்க வேண்டும், இந்த பயிற்சி உங்கள் கன்னத்தின் தசைகளை நன்கு ஸ்ட்ரெட்ச் செய்து, கன்னத்தை ஸ்லிம்மாக காண்பிக்க உதவுகிறது. இந்த பயிற்சியை நீங்கள் தினமும் 1 நிமிடமாவது செய்ய வேண்டும்.
வாய் கொப்பளிப்பது போன்று கன்னத்தை வைக்க வேண்டும், இப்படி செய்யும்போது ரத்த ஓட்டம் நன்கு சீராக ஓடும். இது உங்கள் தசைகளை வலுவடைய செய்கிறது மற்றும் முகத்தை மேம்படுத்துகிறது. இந்த பயிற்சியை தினமும் 8-10 தடவை செய்யவேண்டும்.
சுவிங்க் கம் சாப்பிடுவது ஒரு சிறந்த பயிற்சியாகும், இது உங்கள் முகத்திலுள்ள அதிகப்படியான தசைகளை குறைக்க உதவுகிறது. அதிலும் சுகர் ஃப்ரீ சுவிங்க் கம்-ஐ தேர்ந்தெடுப்பது நல்லது.
புருவங்களை சற்று மேலே உயர்த்தி பார்வையை விரிவுபடுத்தி அபப்டியே 5 வினாடிகள் வைத்திருந்து, பின்னர் கண்களை மூடி இந்த பயிற்சியை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை செய்வதால் உங்கள் நெற்றியில் சுருக்கங்கள் தடுக்கப்படும்.
நாக்கை நீளமாக வெளியில் நீட்டுவது அல்லது நாக்கை சுழற்றுவது போன்ற இரண்டு பயிற்சிகளை செய்ய வேண்டும். இதனை செய்வதால் உங்கள் முக சதைகள் வலுவடைந்து, முகம் ஸ்லிம்மாகும்.