Weight Loss Tips: உடல் எடையை குறைக்க உதவும் சாட்-உணவுகள்!
சாட் உணவுகள் சாப்பிடவேண்டும் அதேமயம் உடலும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஸ்பார்வுட்ஸ் சாட்டை சாப்பிடலாம். பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து இந்த சாட் உணவை தயாரித்து சாப்பிடலாம்.
அவலை வைத்து நிறைய சிற்றுண்டிகள் தயாரிக்கலாம், சத்து மிகுந்த அவளை சாட் உணவாக மாற்றலாம். அவலுடன் சில மசாலாக்கள் மற்றும் நீங்கள் விரும்பும் காய்கறிகளை சேர்த்து அவல் சாட் செய்யலாம்.
தாமரையிலிருந்து பெறப்படும் மக்கானா எனும் இந்த விதையை வைத்து சாட் உணவு செய்யலாம். மக்கானாவுடன் உருளைக்கிழங்கு, கடலை, பச்சை மிளகாய், சில மசாலா பொருட்கள் கலந்து செய்யப்படும் இந்த சாட் உணவு ருசியானதாக இருக்கும்.
சர்க்கரைவள்ளி கிழங்கு உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இதிலும் சில மசாலாக்களை கலந்து சாப்பிடலாம். இதில் நிறைய ஊட்டசத்துக்கள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
தந்தூரி சாட்டின் ருசி அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும், அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அன்னாசிப்பழம் மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்கு கொண்டு இந்த தந்தூரி சாட் செய்யப்படுகிறது. இது சுவையாகவும் உடலுக்கு நன்மையளிப்பதாகவும் இருக்கிறது.