கன்னாபின்னானு உடல் எடை ஏறுதா? அப்ப இதையெல்லாம் இன்னிக்கே நிறுத்துங்க!!
பல ஆரோக்கியமற்ற உனவுகள் மிக சுவையாக இருப்பதால், அவற்றை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. ஆனால், இந்த உணவுகள் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு, அதிக கொழுப்பு, கரோனரி தமனி நோய் மற்றும் மூன்று நாள நோய் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
சமையலில் பொருட்களை வறுக்க சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துவது மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த எண்ணெய் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது உடல் பருமனைத் தவிர, அதிக கொலஸ்ட்ரால், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதற்கு பதிலாக வர்ஜின் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் பிரியர்களுக்கு பஞ்சமில்லை. காலை முதல் மாலை வரை ஸ்நாக்ஸாக இதை பலர் சாப்பிடுவார்கள். ஆனால் இதில் டிரான்ஸ் ஃபேட்ஸ் மற்றும் சோடியம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, கொலஸ்ட்ரால் அதிகரித்து, பின்னர் வயிற்றில் கொழுப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகின்றது.
கடந்த சில தசாப்தங்களில், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் போக்கு மிகவும் அதிகரித்துள்ளது. இவை பல நாட்களுக்கு பாதுகாக்கப்பட்டு உட்கொள்ளக்கூடியவை. ஆனால், இவற்றை தயார் செய்ய பின்பற்றப்படும் செயல்முறைகள் எடை அதிகரிப்புக்கு காரணமாகின்றன.
நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை சர்க்கரையை சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என்று அழைக்கிறார்கள். அதன் உதவியுடன் செய்யப்படும் இனிப்புகள், ஐஸ்கிரீம், பானங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதால், உடலுக்குள் கொழுப்பு சர்க்கரையாக மாறத் தொடங்குகிறது, இதனால் உடல் பருமன் அதிகரிக்கிறது, நீரிழிவு நோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.