தொப்பை பிரச்சனையா? இரவில் இந்த காய்களை உட்கொண்டால் விரைவில் குறைக்கலாம்

Fri, 23 Jun 2023-10:57 am,

உடல் எடையை குறைக்கவும், தொப்பையை குறைக்கவும் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சில குறிப்பிட்ட காய்கறிகளை தினமும் இரவில் மாற்றி மாற்றி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கேரட் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். கேரட் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். ஏனெனில் கேரட்டில் ஏராளமான கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது உடல் மற்றும் தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகிறது. நீங்கள் ஸ்லிம்மாக இருக்க விரும்பினால், கண்டிப்பாக உங்கள் உணவில் கேரட்டை சேர்த்துக்கொள்ளுங்கள்.

ப்ரோக்கோலி சாப்பிடுவதன் மூலமும் எடையைக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் இது நீண்ட நேரம் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. தொப்பையை குறைக்கவும் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பீட்ரூட் சாப்பிடுவதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஏனெனில் பீட்ரூட் நைட்ரேட்டின் நல்ல மூலமாகும். இதை சாப்பிட்டாலும் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். இதை சாலட் வடிவில் அல்லது சாறு தயாரித்து உட்கொள்ளலாம்.

காலிஃபிளவர் சாப்பிட்டால் வயிறு பெரிதாவதை தவிர்க்கலாம். காலிஃபிளவரில் உடல் எடையை குறைக்க உதவும் பல சத்துக்கள் உள்ளன. உடல் எடையை குறைக்க இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

உங்கள் உணவில் பாகற்காயையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பாகற்காய் சாப்பிடுவதால் உடல் எடையும் குறையும். இது குறைந்த கலோரி காய் ஆகும். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதை கறியாக அல்லது ஜூஸ் செய்தும் குடிக்கலாம்.

கத்தரிக்காயை சாப்பிடுவதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். ஏனெனில் கத்தரிக்காயில் நார்ச்சத்து உள்ளது. இதனுடன், கத்தரிக்காயில் ஆண்டி-ஆக்சிடெண்ட் மற்றும் அந்தோசயனின் மூலங்கள் உள்ளன. அவை எடையைக் குறைக்க உதவுகின்றன. 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link