Weight Loss Tips: உடல் எடை குறைய ‘இந்த’ உணவுகளை அவசியம் சேர்க்கவும்
கினோவா (Quinoa) என்பது முழு தானியமாக கருதப்படுகிறது. ஆனல் இது ஒரு விதை. இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனை அர்சியை போலவே சமைக்கலாம்
கொண்டைக்கடலை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. எடை இழப்புக்கு இது நல்லது. கொண்டைக்கடலையிலும் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை சுண்டலாக செய்து சாப்பிடலாம்.
காலிஃபிளவர் காளான் டகோஸ் (Cauliflower Mushroom Tacos) ஒரு மெக்சிகன் உணவாகும். நல்ல சுவையுடனும், உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் தருகிறது. இது எடை இழப்பிற்கு உதவும்.
அதிக புரதம் கொண்ட முட்டை மற்றும் கீரையுடன் தயாரிக்கப்படும் முட்டை உணவு உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது மத்திய தரைக்கடலில் பிரபலமான உணவு.
கிரேக்க பருப்பு சூப்பில் (Greek lentil soup) புரதம் நிறைந்துள்ளது. இது நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.