உடல் எடையை குறைக்க தேனுடன் இந்த 5 உணவை சாப்பிடுங்க போதும்!
)
தேன் உடல் எடையை குறைக்க உதவும் என்பது நன்கு தெரிந்த ஒன்று, இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த நீர் உடல் எடை குறைப்பில் அதிக நன்மையை தருகிறது. இது இன்சுலின் உணர்திறன் மற்றும் வளர்சிதை மாற்றத்தையும், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துகிறது.
)
தேன் மற்றும் பூண்டு கலந்த கலவையானது, உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பூண்டு சற்று காரத்தன்மையுடையது அதனை பச்சையாக சாப்பிடமுடியாது, தேனுடன் கலந்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும். சூடான நீரில் இந்த கலவையை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
)
சூடான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை கலந்து குடிப்பது உடல் எடை குறைப்பில் நல்ல பலனை தரும். இந்த நீரை எப்பொழுது வேண்டுமானாலும் குடிக்கலாம், ஆனால் இதனை காலை நேரத்தில் குடிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
பால் பிடிக்குமென்றால் அதில் நீங்கள் தேன் கலந்து குடிக்கலாம், ஒரு கப் முழு பாலில் 7.69 கிராம் புரதம் உள்ளது. இதனை குடிப்பதால் நீங்கள் நீண்ட நேரம் வயிறு நிறைவான உணர்வை பெறுவதோடு, இது வயிற்று கொழுப்பையும் குறைக்கிறது.
சமீப காலமாக உடல் எடை குறைப்பில் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. வெறும் கிரீன் டீ குடிப்பதால் சிலருக்கு அந்த கசப்பு சுவை பிடிக்காமல் போகலாம், அதனால் அதனுடன் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். இது சுவையாக இருப்பதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.