மள மளன்னு ஏறிய வெயிட்... சட்டென்று குறைய... இந்த வெள்ளை உணவுகளுக்கு நோ சொல்லுங்க
உடல் பருமனை குறைக்க டயட் மிகவும் முக்கியம். நோயற்ற ஆரொக்கியமான வாழ்விற்கு உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்கள் இருப்பது முக்கியம். ஆனால், நம்மில் பலர் அறிந்தோ, அறியாமலோ நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவு பொருட்களை அளவிற்கு அதிகமாக உட்கொள்கிறோம்.
ஆரோக்கியமற்ற உணவு பொருட்களில் சில வெள்ளை நிற உணவுகள் அடக்கம். இதனை விலக்கி வைத்தாலே, உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம். தவிர்க்க வேண்டிய வெள்ளைப் பொருட்கள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
வெள்ளை பிரெட்: மைதா மாவில் இருந்து வெள்ளை ரொட்டி தயாரிக்கப்படுகிறது. மைதா மாவை போது, அதில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் ஆகியவை தானியங்களிலிருந்து பிரிக்கப்படுகின்றன. இதில் ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை.
பாஸ்தாவை குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் பாஸ்தாவை விரும்பி சாப்பிடுகிறார்கள். நார்ச்சத்து, ஊட்டச்சத்து நீக்கப்பட்ட மைதா கொண்டு தயாரிக்கப்படும் பாஸ்தா உடல் பருமனை ஏற்படுத்தும்.
வெள்ளை சர்க்கரை: சர்க்கரையை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது கடுமையான நோய்களுக்கு ஆளாக்கும். இதில் இருப்பதெல்லாம் கலோரி மட்டுமே. இதில் ஊட்டச்சத்து எதுவுமே இல்லை. சக்கரையை முற்றிலும் தவிர்த்தால், உடல் பருமன் வியக்கத்தக்க வகையில் குறையும்
உப்பு: உப்பை குறைந்த அளவில் உட்கொள்வதால், உடல் பருமன் குறைவதோடு, பல உடல் நல பிரச்சனைகளை தவிர்க்கலாம். உப்பை அதிகமாக உட்கொள்வது உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது.
வெள்ளை அரிசி: சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசியை அதிகமாக உட்கொள்வது உடல் பருமனை ஏற்படுத்தும். உடல் எடை குறைய வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசியை உட்கொள்ளலாம். வெள்ளை அரிசியை தவிர்க்க முடியாது என்றால், அதன் அளவை குறைத்துக் கொண்டு, பருப்புகளையும், காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
உடல் பருமன் காரணமாக, இதய நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல ஆபத்தான நோய்களின் அபாயம் அதிகரிக்கும் என்பதை மறக்கக் கூடாது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.