Metabolism: உடல் எடை குறையலையா... மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் சில உணவுகள்
உங்கள் உணவுகளில் மிளகாயைச் சேர்ப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்த உதவும். மிளகாய் மற்றும் மிளகு சாறு இரண்டிலும் காணப்படும் கேப்சைசினாய்டுகள் (CAPs) வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கின்றன.
இஞ்சி உங்கள் கலோரிகளை விரைவாக எரிக்கும் திறன் கொண்டவை. இஞ்சியில் இரைப்பைக் குழாயில் அழற்சி எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு ஆகிய பண்புகள் உள்ளன.
ஓட்ஸ் சாப்பிடுவதால், நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும், அதிக கொழுப்பை எரிக்கவும் உதவும்.
டார்க் சாக்லேட் போன்ற ஃபிளாவனாய்டு நிறைந்த சாக்லேட் உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு உதவும். டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் நன்மை என்றாலும், மிதமான அளவில் உட்கொள்வது முக்கியம்.
உணவு பழக்கங்களுடன் தினசரி உடல் பயிற்சி, தினசரி யோகா, ஒரு குறுகிய நடை பயிற்சி போன்றவையும் அவசியம்.