உடல் எடையை குறைக்க இந்த ஜூஸ் ட்ரை பண்ணி பாருங்க!

Sun, 04 Sep 2022-6:00 am,

ஆரஞ்சு ஜூஸ் :

ஆரஞ்சு ஜூஸ் வைட்டமின்-சி சத்து அதிகம் நிறைந்தது, இது உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது.  இதன் காரணமாக உங்கள் உடலின் கொழுப்புகள் எரிக்கப்படுகிறது மற்றும் இது குறைந்த கலோரியை கொண்டுள்ளது.

 

தர்பூசணி ஜூஸ் :

தர்பூசணியில் நிறைந்துள்ள அமினோ அமிலம் உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது.  இதில் உள்ள வைட்டமின் ஏ, பி, சி வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது, தினமும் தர்பூசணி ஜூஸ் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும்.

 

மாதுளம்பழம் ஜூஸ் :

மாதுளையில் வைட்டமின் ஏ. சி, சி வைட்டமின்கள் உள்ளன, இந்த ஜூஸை தினமும் குடிப்பதால் உடலில் கொழுப்புகள் குறைவதோடு பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது.

 

பீட்ரூட் ஜூஸ் :

பீட்ரூட்டில் எண்ணற்ற வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளது.  பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உங்கள் வயிறு நிரம்பியது போன்ற உணர்வை தருகிறது, மேலும் இது உடல் எடை குறைப்பில் சிறந்த பலனை தருகிறது.

 

சுரைக்காய் ஜூஸ் :

சுரைக்காயில் உள்ள வைட்டமின் பி, நார்சத்து போன்றவை உங்கள் செரிமான மண்டலத்தையும், வளர்சிதை மாற்றத்தையும் தூண்டுகிறது.  இதனை உங்கள் டயட்டில் தினமும் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link