Weight Loss: என்ன செய்தாலும் வெயிட் குறையலையா; இந்த தவறுகள் காரணமாக இருக்கலாம்

Wed, 30 Jun 2021-10:23 am,

எடையை குறைக்க வேண்டும் என்ற புத்தாண்டு தீர்மானத்தில் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ள இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் (Rujuta Diwekar), இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தொடர்ச்சியான வீடியோக்களில்,  எடை இழப்பு பற்றிய  அடிப்படைளை பற்றி விளக்கியுள்ளார் நிலையான வழியில் வெற்றிகரமாக எடை இழக்க உதவும் சில முக்கிய அம்சங்களை குறிப்பிட்டுள்ளார்

எடையைக் குறைப்பதற்கான நிலையான வழியை எப்போதும் தேர்வுசெய்க. இதன் பொருள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதனை எளிதாக பின்பற்றக்கூடியதாக இருக்க வேண்டும் உணவு அல்லது உடற்பயிற்சி முறை என எதுவானாலும், உங்களால் நிலையாக பின்பற்றக் கூடியதாக இருக்க வேண்டும். அதனை ஐந்து வருடங்களுக்கு தொடர்ந்து உங்களால் பின்பற்ற முடிந்தால், அதை இன்னும் 50 ஆண்டுகளுக்கு கூட தொடரலாம். இது வெற்றிகரமான மற்றும் நிலையான எடை இழப்புக்கு உதவும், அதாவது நீங்கள் இழந்த எடை மீண்டும் ஏறாது என ருஜுதா திவேகர் கூறினார்.

எடை இழப்பு என்று வரும்போது  ஒரு வருடத்தில் உங்கள் உடல் எடையில் சுமார் 10% இழக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கும் போது நமது கலாச்சாரம், உணவு வகைகள், காலநிலை ஆகியவற்றைப் கவனத்தில் கொள்ளவும். பாரம்பரிய நடைமுறைகளை கைவிடாமல் பின்பற்றவும் என ருஜுதா கூறுகிறார்.

வெற்றிகரமான எடை இழப்பை அடைய ஒரு நாளில் நீங்கள் சாப்பிட வேண்டிய 5 உணவுகள் பற்றி குறிப்பிடும் போது, ருஜுதா  சில விஷயங்களை அறிவுறுத்துகிறார். ஏதேனும் ப்ரெஷ்ஷான பழம் அல்லது கொட்டை வகைகளுடன் (தேநீர், காபி, மசாலா அல்ல) உங்கள் நாளைத் தொடங்குங்கள் - பிரெஷ்ஷான, சூடான, வீட்டில் தயாரிக்கப்பட்ட காலை உணவை (பேக் செய்யப்பட்ட உணவுகள், பழச்சாறுகள் அல்ல). மதிய உணவிற்கு ஒரு பழம் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறு  எடுத்துக் கொள்ள முயற்சிக்கவும். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் உங்கள் மதிய உணவை உண்ணுங்கள். உங்கள் உணவில் தினை வகைகளை சேர்த்து கொள்ளுங்கள். மாலை 4 மணியளவில், கொட்டைகள் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்னாக்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்.  உங்கள் இரவு உணவை படுக்கைக்கு செல்வதற்கு 2-3 மணி நேரம்  முன், இரவு 7-8: 30 க்கு இடையில் சாப்பிடுங்கள். உங்கள் இரவு உணவில் அரிசியைச் சேர்க்கவும்.

 

உங்கள் வாராந்திர உடற்பயிற்சியானது 4S கள் அடங்கியதாக இருக்க வேண்டும் - strength, stamina, stability மற்றும் stretching  - நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் அல்லது  வாரத்திற்கு 3 மணிநேரம்  என்ற அளவில் இருக்க வேண்டும். .இந்த 4S அனைத்தையும் வழங்கக்கூடிய உடற்பயிற்சியில் ஒன்று யோகா, ஆனால் நீங்கள் அதை சரியாக  முறையில் செய்ய வேண்டும், ஊட்டச்சத்து நிபுணர் குறிப்பிட்டார்.

போதுமான ஓய்வு மற்றும் தூக்கம் இல்லாமல், ஒரு நிலையான உடல் எடை இழப்பு என்பது கேள்விக்குறியாகும். உங்களால் முடிந்த அளவிற்கு மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும், மேலும், புத்துணர்வுடன் இருக்க உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும், 3 நிமிடங்களுக்கு எழுந்து நிற்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். மேலும், 20-30 நிமிடங்கள் மதிய தூக்கமும் பங்கு வகிக்கிறது. தேநீர், காபி, ஆல்கஹால் போன்றவற்றை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் அதிகபட்சம் 2-3 கப் தேநீர் / காபி  எடுத்துக் கொள்ளலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link