டயட்ல இருக்கீங்களா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க.. ஜாக்கிரதை!!
உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்துவிட்டு, அதன் பின்னர் நாம் அதில் சற்று தளர்வு காட்டும்போது, உங்கள் உடல் சர்க்கரை மற்றும் கொழுப்பு அமிலங்களை மீண்டும் ஈடுசெய்ய கோரலாம். உணவில் செய்யப்படும் சில தவறுகள் உங்கள் கடின உழைப்பை விரைவில் கெடுத்துவிடக்கூடும். ஆகையால் டயட்டிங் இருக்கும்போது பின்வரும் விஷயங்களில் அதிகப்படியான கவனம் தேவை.
டயட்டிங்கில் நீங்கள் புரதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, மீதமுள்ள ஊட்டச்சத்துக்களை துண்டித்தால், அது தவறு. அரிசி, தானியங்கள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகியவை உடலுக்கு மிகவும் முக்கியம். அவற்றை விலக்குவதால் உங்கள் உடலில் வேறு சில குறைபாடுகள் ஏற்படலாம்.
எது நல்லது, எது கெட்டது என்று அனைத்து நேரத்திலும் உணவை மதிப்பிடாதீர்கள். எப்போதாவது மேகி அல்லது பீட்சா சாப்பிடுவதால் நீங்கள் ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவதாக அர்த்தமல்ல. அதேபோல், அனைத்து வேளையும் வெறும் சாலட்டை மட்டுமே உட்கொண்டால், உங்களால் உணவில் இருக்கும் இன்பத்தை அனுபவிக்க முடியாது.
எப்பொழுதும் குறைந்த கலோரி உணவுகளையே உண்ண வேண்டும் என்ற எண்ணம் சில சமயம் மன அழுத்தத்தையும் இறுக்கத்தையும் ஏற்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் குறைந்த கலோரி உணவைத் தேர்ந்தெடுத்தால் உடலுக்கு தேவைப்படும் ஆற்றல் கிடைக்காமல் போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உணவுக் கட்டுப்பாட்டின் போது, உங்களுக்குப் பிடித்த உணவில் இருந்து விலகி இருந்தால், அதுவும் தவறு. உங்கள் சௌகரியமான உணவில் இருந்து விலகி இருப்பது சில சமயங்களில் அதிகப்படியான உணவை நீங்கள் உட்கொள்வதற்கு வழிவகுக்கலாம். இது உங்கள் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்டு உங்களுக்கு பிடித்தமான உணவை உட்கொள்ளலாம்.
பல வித டயட் பிளான்கள்: டயட் மற்றும் டிடாக்ஸ் திட்டங்களை மீண்டும் மீண்டும் மாற்றுவதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஒருமுறை உங்களுக்கான சிறந்த உணவுத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, அதைக் கடைப்பிடிக்கவும். இது உங்களுக்கு மிகச் சிறந்த பலன்களைத் தரும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.