தொப்பையால் பிரச்சனையா? இந்த சூப்பர் உணவுகளால் தொப்பை தொலைந்து போகும்

Fri, 30 Dec 2022-7:00 pm,

உடல் பருமன் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அதில் முதல் காரணம் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கமாகும்.

அதிகரிக்கும் உடல் பருமனால், இரத்த அழுத்த அபாயம் ஏற்படுகிறது. ஆகையால், அதிகரிக்கும் உடல் கொழுப்பை சரியான நேரத்தில் நிறுத்த முயற்சிக்க வேண்டியது அவசியமாகும். உடல் பருமன் அதிகரிப்பதால் கவலையில் உள்ளவர்களுக்கு இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உணவுகள் உதவக்கூடும். இவை உடலில் உள்ள அதிக கொழுப்பைக் குறைக்க உதவியாய் இருக்கும்.

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், சியா விதைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் பயன்பாடு உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இவற்றை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், சோர்வு குறையும். எடை இழப்புக்கும் இது உதவியாக இருக்கும். 

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் ஊறவைத்த வால்நட் அதாவது வாதுமைக் கொட்டை மற்றும் பாதாம் சாப்பிடலாம். ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, இவற்றில் நல்ல கொழுப்பு உள்ளது. இது தவிர, இவற்றை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவு பராமரிக்கப்படுகிறது. மேலும் இவற்றுல் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதன் காரணமாக செரிமான அமைப்பு நன்றாக இருக்கும்.

ஒரு நாளைக்கு இரண்டு க்யூப் டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடல் கொழுப்பை விரைவாகக் குறைத்து உடல் வடிவத்தை நன்றாக வைத்திருக்க உதவுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதிலிருந்து உடலுக்கு தேவையான ஆற்றலும் சக்தியும் கிடைக்கின்றது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link