உடல் எடை குறைக்க கஷ்டப்பட வேண்டாம்! ருசியான 5 ஆரோக்கிய உணவுகள் இதோ!
முட்டை, பால், மிளகு மற்றும் வெண்ணெய் சேர்த்து செய்யப்படும் முட்டை பொரியல் ருசியாகவும் அதேசமயம் உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. விருப்பப்பட்டால் இதில் உங்களுக்கு பிடித்த சில காய்கறிகளையும் ருசிக்காக சேர்த்து கொள்ளலாம்.
ராஜ்மா, பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை போன்றவற்றை சேர்த்து செய்யப்படும் ஸ்ப்ரவுட்ஸ் சாட் வயிறை நிறைவானதாக உணரவைக்கும், இதில் எலுமிச்சை சாறு மற்றும் சில மசாலாக்களை ருசிக்காக சேர்த்து கொள்ளலாம்.
சோயாவில் புரோட்டீன் சத்து நிறைந்துள்ளது, சோயா மற்றும் ரவா சேர்த்து செய்யப்படும் ஊத்தாப்பம் மொறுமொறுவென்று ருசியாகவும், பசியுணர்வை கட்டுப்படுத்துவதாகவும் இருக்கும்.
காளிஃப்ளவரில் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், குறைந்தளவு கொழுப்பும் உள்ளது. இதனை ரோஸ்ட் செய்து ஏதேனும் சட்னி வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
மெக்சிகன் குயினோவா சாலடில் குயினோவா, திணை, கிட்னி பீன்ஸ், மொறுமொறுப்பான காய்கறிகள் மற்றும் லெமன் சேர்த்து செய்யப்படும் இந்த உணவு ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்.