வேகமா உடல் எடையை குறைக்கணுமா? உடனே பப்பாளியை இப்படி சாப்பிடுங்க போதும்
நாம் தினமும் உட்கொள்ளும் பழங்களும் காய்களுமே நம் தொப்பை கொழுப்பை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் நமக்கு உதவுகின்றன. அவற்றில் பப்பாளிக்கு முக்கிய பங்கு உள்ளது.
பப்பாளியில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதன் கலோரி அளவு மிக குறைவு. ஆகையால், இதை உட்கொள்வதால், செரிமானம் சீராகும், கொழுப்பு வேகமாக எரிக்கப்படுகின்றது, உடல் எடை வேகமாக குறைகின்றது.
காலை உணவில் பப்பாளியை உட்கொள்ளலாம். இதை அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள், பாப்பாளி சாறு செய்தும் குடிக்கலாம். இதனால், வயிறு நீண்ட நேரத்திற்கு நிரம்பிய உணர்வுடன் இருக்கும்.
தயிருடன் பப்பாளியை சேர்த்து உட்கொள்வது எடை இழப்புக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது சாப்பிட மிகவும் சுவையாகவும் இருப்பதால் அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் உடல் பருமன் குறையும்.
பப்பாளி சாறுக்கு பதிலாக பாலுடன் பப்பாளியை அரைத்து பப்பாளி மில்க் ஷேக்காக குடிக்கலாம். இதனால் உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பு குறையும். மேலும் இதில் சுவையை சேர்க்க இதில் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்க்கலாம்.
தொப்பை கொழுப்பு பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக தினமும் உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடலுக்கு ஏராளமான ஆற்றலை வழங்குவதோடு, படிப்படியாக அதிகப்படியான கொழுப்பையும் குறைக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.