கடந்த ஆண்டு கோரமண்டல்! இந்த ஆண்டு காஞ்சன்ஜங்கா! பாதுகாப்பற்றதாக மாறும் ரயில்வே?

Mon, 17 Jun 2024-1:20 pm,

இன்று மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இது ரயில்வே பாதுகாப்பு குறித்து கவலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

 

நியூ ஜல்பைகுரி நிலையத்திற்கு அருகில் உள்ள ரங்கபாணி அருகே இன்று காலை 9 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் சிக்னலை மீறி கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸின் பின்பகுதியில் மோதியதால், தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

 

சரக்கு ரயில் சிக்னலை மீறியதால் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது மோதியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தை இந்த சம்பவம் நினைவுபடுகிறது. 

 

கடந்த ஆண்டு ஜூன் 2023ல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் மோசமான ரயில்வே விபத்துகளில் கோரமண்டல் விபத்தும் ஒன்றாகும். அந்த  விபத்தில் 293 பயணிகளின் உயிரை பறிகொடுத்தும், 1100 பேர் காயமடைந்தனர்.

 

எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தகவல் தொடர்பு அமைப்புகளில் உள்ள சிக்கல்களை உடனே சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

கவாச் மேம்படுத்தப்பட வேண்டும்: கவாச் இந்திய ரயில்வேயால் உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு, ரயில் நடவடிக்கைகளின் பாதுகாப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. கவாச் லோகோ பைலட்டுகளுக்கு ஆபத்தில் சிக்னல் கொடுக்கும் மற்றும் வேகத்தை குறைக்க உதவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link