OM Muruga: பழனிமலை ஆண்டவர் ஞானசக்திதாரர் கந்தசாமியின் 16 வகை கோலங்களும் வழிபாடும்
சிவபுத்திரன் சரவணன், கங்கையால் தாங்கப்பட்ட காங்கேயன். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட காங்கேயன். கந்தன் என்ற திருநாமம் பெற்ற முருகக் கடவுளின் பிரபலமான 16 வகைக் கோலங்கள் யாவை? தெரிந்துக் கொள்வோம்.
ஞானசக்திதரர் என அழைக்கப்படும் முருகன், திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் ஞானசக்திதரர் என்றால், பழனிமலை ஆண்டவர் திருவடிவம் கந்தசாமி. சென்னிமலையில் வீற்றிருக்கிரார் ஆறுமுக தேவசேனாபதி
பக்தர்களின் வினைகளை நிம்மதியை வழங்க நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவராக சுப்பிரமண்யர் எழுந்தருளியுள்ளார். கஜவாகனர் வடிவில் முருகரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். யானை மீதிருக்கும் கஜவாகனர் திருவுருவம் அருளும் அன்பும் நிரம்பியது.
அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிக்கும் சரவணபவர். கார்த்திகை நட்சத்திர நாட்களில் கார்த்திகேயர் வழிபாடு விசேஷமானது. கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் குடி கொண்டுள்ளார்
ஆணவத்தை அடியோடு நீக்கும் குமாரசாமி, குமாரகோவிலில் வீற்றிருக்கிறார். சிவசக்தியை வழிபட்ட பலனைத்தர திருச்செந்தூரில் உள்ள முருகன் சண்முகர் திருவடிவத்தை தாங்கியிருக்கிறார். தாரகாசுரன் என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமானுக்கு கிடைத்த நாமம் தாராகாரி. உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.
சேனானி கோலத்தில் உள்ள முருகரை வழிபட்டால் பகை அழியும். பிரம்மசாஸ்தா கோலத்தில் உள்ள கார்த்திகேயரை வழிபட்டால் வித்தைகளில் தேர்ச்சி பெறலாம். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோவில் உள்ளது. வள்ளிகல்யாணசுந்தரர் திருமண தடைகள் விரைவில் அகலம், கன்னிப் பெண்களுக்கு கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோவில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.
பாலசுவாமி கோலத்தில் இருந்து உடல் ஊனங்களையும் குறைகளையும் அகற்றும் தெய்வம். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோவில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது. சிரவுபஞ்சபேதனர் கோலத்தில் உள்ள முருகரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மயில் மீது இருக்கும் சிகிவாகனர் அருட்கோலம், வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிக்கும் கோலம் ஆகும்