வெறும் வாசத்துக்கு மட்டுமல்ல, அழகையும் அம்சமாக்கும் ஜாதிபத்ரியின் அற்புத பலன்கள்
ஜாதிபாத்ரியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை பல்வேறு வகையான நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. ஜாதிபாத்ரியின் நன்மைகள் பற்றி விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்
உடல் எடையைக் குறைக்க ஜாதிபாத்ரி சிறந்தது. உடலில் குவியும் கெட்டக் கொழுப்புகளை கழிவில் கழித்துவிடட், தினசரி உணவுகளில் ஜாதிபாத்ரியைச் சேர்த்துக் கொள்ளலாம். இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
ஜாதிபாத்ரி இயற்கையாகவே சருமத்தை மேம்படுத்துகிறது. ஜாதிபாத்ரியில் இருக்கும் லிக்னன் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக ஏற்படும் தூக்கமின்மை என்ற பிரச்சனை, பல பெரிய உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தும். ஜாதிபாத்ரி தூக்கமின்மைக்கு நல்ல தீர்வாக கருதப்படுகிறது. தூக்கத்தை மேம்படுத்தும் சில பொருட்கள் இதில் உள்ளன.
கால்சியம் குறைபாட்டின் காரணமாக எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இது எலும்பு தொடர்பான பிரச்சினைகளான மூட்டுவலி, கீழ்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற அபாயங்களை அதிகரிக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க நீங்கள் உட்கொள்ளும் உணவுகளில் ஜாதிபாத்ரியைப் பயன்படுத்த வேண்டும். ஜாதிபாத்ரியில் உள்ள ஆன்ட்டி அழற்சி பண்புகள் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கின்றன.
செரிமானம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜாதிபாத்ரி நன்மை பயக்கிறது. இது வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் பசியை அதிகரிக்கிறது.
சிறுநீரகம் தொடர்பான வியாதிகளுக்கு சிகிச்சையளிக்க ஜாதிபாத்ரி பயன்படுத்தப்படுகிறது. உணவில் ஜாதிபாத்ரியைப் பயன்படுத்தினால் பல்வேறு நோய்களும் ஓடிப்போகும்
எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவுகளின் உட்கொள்ளல் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. இது கல்லீரலை பாதிக்கிறது. ஜாதிபாத்ரி ஆன்ட்டி அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகளைக் கொண்டுள்ளதால், கல்லீரல் பாதுகாப்புக்கு ஜாதிபத்ரி மிகவும் சிறந்தது
குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க ஜாதிபாத்ரியை உட்கொள்ள வேண்டும். ஜாதிபாத்ரியில் ஆன்ட்டி அழற்சி பண்புகள் சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு நல்ல தீர்வாகின்றன