உச்சி முதல் பாதம் வரை.... நன்மைகளை வாரி வழங்கும் தனியா நீர்
கொத்தமல்லி தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், பல வித ஆரோக்கிய நன்மைகளுடம் சருமம் மற்றும் கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
இது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தனியா தண்ணீர் தயாரிக்கும் முறை மற்றும் இந்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தைராய்டு குறைபாடு அல்லது அதிகப்படியான தைராய்டு என இரண்டு பிரச்சனைகளிலும் தனியா நீர் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கொத்தமல்லியில் உள்ள பல வகையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் தைராய்டு ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
இது தவிர மல்லி நீரை தொடர்ந்து குடித்து வந்தால், யூரிக் அமில பிரச்சனையும் குறையும். இந்த தண்ணீரைக் குடிப்பதன் மூலம், உடலில் இருந்து நச்சுகள் மற்றும் யூரிக் அமிலம் வெளியேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொத்தமல்லி இலை போல மல்லி நீரும் உடலுக்கு பல வழிகளில் நன்மை செய்கிறது.
தனியா விதையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. மல்லி விதைகளை ஊறவைத்து அதன் தண்ணீரை குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுவதாகவும் சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, இந்த தண்ணீரை குடிப்பதால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களும் அகற்றப்படுகின்றன.
மல்லி நீர் இரத்த சர்க்கரையை குறைப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு ஏற்கனவே குறைவாக உள்ளவர்கள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதன் காரணமாக, அத்தகையவர்களின் இரத்த சர்க்கரை அளவு மேலும் குறையும் ஆபத்து அதிகரிக்கிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் (Coriander Water) குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, இந்த தண்ணீரை குடிப்பதால், செரிமானம் மேம்படும், வளர்சிதை மாற்றமும் மேம்படும். கொத்தமல்லி நீர் உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் ஒரு டீடாக்ஸ் ட்ரிங்காக பயன்படுகிறது. ஆகையால் உடல் பருமனை குறைக்க, தினமும் காலையில் கொத்தமல்லி தண்ணீரை குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை