சோர்வு, ஞாபக மறதி, பலவீனம்... இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை: வைட்டமின் பி12 குறைபாடாக இருக்கலாம்
இந்தியாவில் 70 சதவீதம் பேர் வைட்டமின் பி 12 குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் குறைபாட்டால் பெரும்பாலானோருக்கு சோர்வு மற்றும் பலவீனம் ஏற்பட ஆரம்பித்து பின்னர் படிப்படியாக பல பிரச்சனைகள் தோன்றும்.
வைட்டமின் பி 12 (Vitamin B12) குறைபாடு உடலுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த குறைபாட்டை எடுத்துக்காட்டும் சில அறிகுறிகளும் உள்ளன. அவற்றை பற்றி தெரிந்துகொண்டு அவை தோன்றினால் உடனடியான மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது. வைட்டமின் பி 12 குறாபாட்டை குறிக்கும் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஒருவர் அடிக்கடி சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தால், அவரது உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கலாம். வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக, ஆக்ஸிஜன் வழங்கல் குறையத் தொடங்குகிறது. ஆகையால் எப்போதும் சோம்பல் மற்றும் ஆற்றல் பற்றாக்குறை இருக்கிறது. வைட்டமின் பி12 குறைபாட்டின் முதல் அறிகுறி சோர்வு (Fatigue) மற்றும் பலவீனம் ஆகும்.
உங்கள் நினைவாற்றல் பலவீனமடையத் தொடங்கினால் அல்லது எதையும் நினைவில் வைத்துக் கொள்ள (Memory Loss) உங்கள் மூளைக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தால், உங்கள் உடலில் பி 12 இன் குறைபாடு (Vitamin B12 Deficiency) இருக்கலாம். பல நேரங்களில் நீங்கள் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படலாம். உங்கள் மூளை எப்போதும் சோர்வாக இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.
பி 12 இன் குறைபாடு காரணமாக, நரம்புகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. நரம்புகள் பலவீனமடையத் தொடங்கும் போது, கைகள் மற்றும் கால்களில் தொடர்ந்து கூச்ச உணர்வு ஏற்படுகிறது மற்றும் உணர்வு குறையத் தொடங்குகிறது. சில சமயம் கைகளும் கால்களும் நடுங்க ஆரம்பிக்கும். வைட்டமின் பி 12 இன் கடுமையான குறைபாடு இருந்தால், கைகள் மற்றும் கால்களின் நரம்புகள் சேதமடையத் தொடங்கும்.
வைட்டமின் பி 12 குறைபாட்டால், கண் பார்வை மங்கலாகத் தொடங்கும். மேலும் உங்கள் பார்வையும் குறையத் தொடங்கும். அதே நேரத்தில், வாயில் கொப்புளங்கள் தோன்ற ஆரம்பித்தால், இதுவும் வைட்டமின் பி12 குறைபாட்டின் முக்கிய அறிகுறியாகும்.
நம் உடலுக்கு தினமும் போதுமான அளவு வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. பெரியவர்கள் 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்கள் இதை விட அதிகமாக உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு வைட்டமின் பி12 அளவு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.