தலை முதல் கால் வரை... எலுமிச்சையில் இருக்கு எக்கச்சக்க நன்மைகள்
எலுமிச்சை பழத்தை பல வகைகளில் உணவில் சேர்த்துக் கொள்வது உடலின் ஆரோக்கியத்தையும் தற்காப்பு தன்மையும் பலப்படுத்துகிறது. தினமும் நமது உணவில் எலுமிச்சையை சேர்த்தால் உடலுக்கு கிடைக்கும் சில முக்கியமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. உடலை தொற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. சளி, இருமல் போன்ற பருவகால பிரச்சனைகளிலிருந்து உடலை காப்பாற்ற தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்
எலுமிச்சை சாறு செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் நாம் உட்கொள்ளும் உணவு எளிதாக ஜீரணிக்கப்படுகிறது.
எலுமிச்சை சாறு உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. எடையை இழக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் தினமும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். சில நாட்களில் உடல் எடை குறையும்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகின்றன. எலுமிச்சை சாற்றில் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகப்பொலிவு அதிகரிக்கும்
எலுமிச்சை சாறு முடி வேர்களை வலுப்படுத்தவும் வறட்சியை நீக்கவும் உதவுகிறது. எலுமிச்சை சாற்றின் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்
எலுமிச்சை சாற்றில் ஆன்டிசெப்டிக் பண்புகள் உள்ளன. இவை காயங்களை விரைவில் குணமாக்கும், தொற்று ஏற்படுவதில் இருந்தும் நம்மை காப்பாற்றும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.