Sukanya Samriddhi Yojana: இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன தெரியுமா?

Wed, 12 Jun 2024-4:50 pm,

ஜூன் மாதத்துடன் முடிவடையும் காலாண்டிற்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் மதிப்பாய்வு செய்யும். இருப்பினும், இம்முறை வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றே கூறப்படுகின்றது. அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், 8.2 சதவீத ஆண்டு வட்டி கிடைக்கிறது. 

இதில் முதலீடு செய்யும் போது 80சி பிரிவின் கீழ் வருமான வரியில் இருந்து விலக்கு கிடைக்கும். கடந்த சில வருடங்களில் SSY -யில் ஏற்பட்டுள்ள 5 முக்கிய மாற்றங்களைப் பற்றி இங்கே காணலாம். 

 

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்ட விதிகளின் கீழ், கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தவறான வட்டியைத் திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடு நீக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் கணக்கில் வருடாந்திர வட்டி வரவு வைக்கப்படும். முன்னதாக இது காலாண்டு அடிப்படையில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

முந்தைய விதிகளின்படி, ஒரு பெண் குழந்தை 10 வயதில் கணக்கை இயக்கலாம் என்றிருந்தது. ஆனால் புதிய விதிகளின் கீழ் இது மாற்றப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, பெண் குழந்தைக்கு 18 வயதாகும் முன் சுகன்யா சம்ரித்தி கணக்கை இயக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். 18 வயது வரை பெற்றோர் மட்டுமே கணக்கை இயக்குவார்கள்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய விதி உள்ளது. நீங்கள் குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால், கணக்கு டீஃபால்ட் கணக்காகிவிடும். புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி, கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படாவிட்டால், கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு, முதிர்வு வரை பொருந்தக்கூடிய விகிதத்தில் தொடர்ந்து வட்டி கிடைக்கும். முன்பு இந்த விதி இல்லை.

சுகன்யா சம்ரித்தியின் முந்தைய விதிகளின் அடிப்படையில், பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கின் பலன் இரண்டு பெண் குழந்தைகளின் கணக்குகளில் கிடைக்கும். ஆனால் இப்போது புதிய விதியின் கீழ், முதல் மகளுக்குப் பிறகு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால், அவர்களுக்கும் கணக்குகளைத் திறக்க விதிமுறை உள்ளது. இந்த வழியில் ஒரு நபர் தனது மூன்று பெண் குழந்தைகளுக்கு கணக்கு திறக்க முடியும்.

 

முன்னதாக, மகள் இறந்தாலோ அல்லது மகளின் குடியிருப்பு முகவரி மாற்றப்பட்டாலோ 'சுகன்யா சம்ரித்தி யோஜனா' கணக்கை மூடலாம். ஆனால் இப்போது கணக்கு வைத்திருப்பவருக்கு ஏதாவது தீவிர நோய் ஏற்பட்டாலும் கணக்கை மூடலாம் என்ற விதி சேர்க்கப்பட்டுள்ளது. பாதுகாவலரின் மரணம் ஏற்பட்டாலும் கணக்கை முன்கூட்டியே மூடலாம்.

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link