இந்த வங்கிகளில் பணம் பத்திரமா இருக்கும்: டாப் 3 வங்கிகளின் பெயர்களை வெளியிட்ட RBI

Tue, 19 Dec 2023-3:10 pm,

வழிமுறைகளை மீறி, சட்டங்களை மதிக்காமல், விதிகளை மீறிய செயல்களில் ஈடுபடும் வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கி கண்காணித்து தண்டனை அளிக்கின்றது. சமீபத்திலும் பல வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் சிக்கியதை கண்டோம். 

ரிசர்வ் வங்கியின் பாராட்டுகளை பெற்ற வங்கிகளும் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்!! நாட்டில் உள்ள மூன்று வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என சமீபத்தில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 'வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி' பட்டம் பெற்ற அந்த வங்கிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்தியாவின் வங்கித் துறை மிகப் பெரியது. இதில் அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மற்றும் பணம் செலுத்தும் வங்கிகள் போன்ற பல வகையான வங்கிகள் அடங்கும். இவை அனைத்தும் முறையாகச் செயல்படுவதும், மக்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதும் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பொறுப்பாகும்.

ஏதாவது ஒரு வங்கி தன் செயல்பாடுகளில் தோல்வியடைந்தால், ரிசர்வ் வங்கி சரியான நேரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. இது போன்ற நடவடிக்கைகள் யெஸ் வங்கியின் அதிகரித்த NPA விஷயத்திலும், பிற அரசு வங்கிகளின் விஷயத்திலும் எடுக்கப்பட்டன. 

இப்போது ரிசர்வ் வங்கி, எப்போதும் தோல்வியடைவதாற்கான வாய்ப்பே இல்லாத நாட்டின் 3 வங்கிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), உள்நாட்டு அமைப்பில் ஒரு முக்கியமான வங்கி (D-SIB) என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. இரண்டு தனியார் துறை வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) மற்றும் எச்டிஎஃப்சி வங்கியும் (HDFC Bank) இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மிகப்பெரிய நிலையில், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள, தோல்வியடைவதற்கான சாத்தியக்கூறுகளே இல்லாத பெரிய வங்கிகள் D-SIB -கள் என்று அழைக்கப்படுகின்றன.

'தோல்வியடைய முடியாத வகையில் மிகப்பெரிய வங்கிகள்' (‘too big to fail’) என்ற கருத்தின் கீழ், அத்தகைய வங்கிகள் ஏதேனும் நெருக்கடியை சந்திக்கும் போது, அரசு அவற்றுக்கு ஆதரவளித்து, மூழ்காமல் காப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த வங்கிகள் நிதி சந்தையில் சில கூடுதல் வசதிகளைப் பெறுகின்றன, மேலும் இந்த வங்கிகள் மீது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கிறது.

2021 ஆம் ஆண்டின் டி-எஸ்ஐபி பட்டியலின் அளவுருக்களின் அடிப்படையில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ளன என்று ஆர்பிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக ரிசர்வ் வங்கி 2015 இல் எஸ்பிஐ வங்கியையும், 2016 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியையும் CODI-SIB வங்கிகளாக அறிவித்தது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link