ரயில் பெட்டிகளில் மஞ்சள் மற்றும் வெள்ளை கோடுகள் இருக்க காரணம் என்ன?

Tue, 23 Feb 2021-2:04 pm,

1951 இல், இந்திய ரயில்வே தேசியமயமாக்கப்பட்டது. இந்திய ரயில்வே தான் ஆசியாவின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் மற்றும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நெட்வொர்க் என்பதும் கூடுதல் சிறப்பு. சரி, நம்ம ரயில்வே துறையின் பெருமையைக் கொஞ்சம் பார்த்துவிட்டோம். இப்போ விஷயத்துக்கு வருவோம். ரயில் பெட்டியில கடைசியில் எதுக்குங்க இந்த சாய்வான மஞ்சள் நிற கோடுகள் இருக்கு?

வழக்கமாக ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கூட ரயிலில் இருக்கும் சில முக்கியமான அடையாளங்களுக்கான அர்த்தமெல்லாம் சரியாக தெரியவதில்லை. அது போன்ற விஷயங்களில் ஒன்னுதாங்க ரயிலின் பெட்டிகளில் கடைசியில் ஜன்னலுக்கு மேலே உள்ள மஞ்சள் நிற கோடுகள்.

இந்தியாவில் எக்ஸ்பிரஸ் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் அனைத்தும் நீல நிறத்தில் தான் பெட்டிகளைக் கொண்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான கம்பார்ட்மெண்டுகள் முன்பதிவு செய்ததாகவே இருக்கும். ஒரு சில பெட்டிகளின் கம்பார்ட்மெண்டுகள் தான் முன்பதிவு செய்யப்படாததாக இருக்கும்.

இந்த மஞ்சள் கோடுகள் இரண்டாம் வகுப்பின் முன்பதிவு செய்யப்படாத அதாவது Second Class unreserved பெட்டியைக் குறிக்கிறது. பயணிகள் ரயில் நிலையத்திற்கு வரும்போது, ஜெனரல் கம்பார்ட்மென்ட் எது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு இருப்பார்கள், ஆனால் இந்த மஞ்சள் கோடுகளைப் பார்ப்பதன் மூலம், இது general coach என்பதை மக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும். மேலும் unreserved coach என்பதை ஈசியாக தெரிந்துக்கொள்ளவும் இது உதவியாக இருக்கும்.

இதேபோல், நீல / சிவப்பு நிற ரயில் பெட்டிகளில் உள்ள மஞ்சள் நிற கோடுகள் ஊனமுற்றோர் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல், சாம்பல் நிறத்தில் பச்சை நிற கோடுகள் உள்ள பெட்டிகள் பெண்களுக்கு மட்டுமானது என்பதைக் குறிக்கிறது. 

எனவே ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளைப் பயணிகள் கண்டுபிடிக்க இந்த மஞ்சள் நிற கோடுகள் உள்ளது என்பது இப்போது உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கும் என்று நினைக்கிறோம். இதே போல ரயில்வே அடையாளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருந்தாலும் கமெண்டில் சொல்லுங்கள். நாமும் தெரிந்துக்கொண்டு எல்லோருக்கும் தெரியப்படுத்தலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link