கெட்ட காற்றை சுவாசித்தால் இவ்வளவு ஆபத்தா?
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை 9:30 மணியளவில் டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு(AQI) 426 ஆக இருந்தது. AQI அளவு 400க்கு மேல் இருந்தால் அது ஆபத்தானது, ஆரோக்கியமான மக்கள் பாதிப்பிற்குள்ளாவார்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான் பாதிப்பு உண்டாகும்.
வியாழக்கிழமை நிலவரத்தின்படி மாலை 4 மணியளவில் AQI அளவு 450 ஆக இருந்தது, இது தீவிரமான நிலையாகும். இதன் காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை பள்ளிக்கு வரவேண்டாம் என்றும், ஆன்லைனில் வகுப்புகளை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
காற்று மாசுபாட்டின் அதிதீவிர நிலை பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகளை உண்டாக்கும் குறிப்பாக இது குழந்தைகளில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும்.
டெல்லி மக்களை கார்களின் பயன்பாட்டை குறைக்கவும், முடிந்தளவு வீட்டிலேயே இருந்து வேலை பார்க்கவும், விறகுகள் எரிப்பதை குறைக்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.