முட்டையை பச்சையாக குடிக்கலாமா? ஆஃப் பாயில் முட்டை ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்குமா?
நமது வாழ்க்கையில் முட்டை என்பது குறைவான விலையில் கிடைக்கும் சத்து மிக்க உணவுப் பொருளாகும். இது சைவமா அசைவமா என்ற கேள்விகள் இருந்தாலும், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய முட்டை உலகம் முழுவதும் முட்டை மிகவும் விரும்பி உண்ணப்படும் உணவு ஆகும்.
சுலபமாக தயாரிக்கப்படும் அதன் தன்மையால் அனைவராலும் முட்டை விரும்பப்படுகிறது. சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டாலும், ஆரோக்கியத்தை தரும் அற்புதமான உணவுப்பொருள் முட்டை என்பது குறிப்பிடத்தக்கது.
புரதம் ரிபோபிளேவின், போலேட், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், செலினியம், மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ, இ, பி6 உள்ளிட்ட சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.
எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ள முட்டையை தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது. முட்டையில் லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளன.
பச்சை முட்டையில் உள்ள திரவம் உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. வேகவைக்காத முட்டையில் 10% புரதமும், 90% நீரும் உள்ளது. முட்டையை பச்சையாக சாப்பிடுவதால், அதிலுள்ள வெள்ளைக்கரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்
வெந்த முட்டை நல்லதா வேகாத முட்டை நல்லதா? என்ற கேள்விக்கு ஆஃப் பாயில் முட்டை என்று பலரும் பதில் சொல்லலாம். உண்மையில் பச்சையாக முட்டை உண்பதைவிட, பாதி வெந்தும் வேகாமலும் இருக்கும் ஆஃப் பாயில் முட்டை நல்லது
முட்டையில் உள்ள கோலைன், நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சினைகளை குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்க உதவுகிறது.
முட்டையில் உள்ள லூட்டின் எனும் ஆன்டி ஆக்ஸிடென்ட் , கண் நோய் வராமலும் கண் புரை ஏற்படாமலும் தடுக்கும்
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை