Magic Wands: உடலாரோக்கியத்தை பாதுகாக்கும் மந்திர பொருட்கள்! வைட்டமின்களின் முக்கியத்துவம்!
நமது உணவிலேயே அனைத்து வைட்டமின்களும் கிடைத்துவிடும். அனைத்து உணவு வகைகளை உட்கொள்ளாதவர்கள் மற்றும் குறிப்பிட்ட மருத்துவ நிலைமைகள் உள்ளவர்களின் ஆரோக்கியத்திற்காக சப்ளிமெண்ட்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்
சப்ளிமெண்ட்கள் அவசியமா என்ற கேள்விக்கு, தேவைக்கு ஏற்ப என்று பதில் சொல்லலாம். உணவில் போதுமான நுண்ணூட்டச் சத்துக்கள் இல்லாதபோது, மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை
வைட்டமின் ஏ உடலுக்கு மிக முக்கியமான வைட்டமின்களில் ஒன்றாகும். வைட்டமின் ஏ, நமது உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்ததி, தொற்று மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கிறது.
நம் உடலுக்கும் மிகவும் முக்கியமான நுண்ணூட்டச் சத்துக்களில் வைட்டமின் பி முக்கியமானது. . உடலின் செல்களை சீராக செயல்பட வைக்க வைட்டமின் பி அவசியமாகும். வளர்சிதை மாற்றத்துக்கு உதவும் வைட்டமின் பி நமது உடலுக்கு அத்தியாவசியமானதாகும்
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் சி மிகவும் அவசியம். உடல் திசுக்களின் வளர்ச்சிக்கும் அவற்றின் சேதத்தை சரிசெய்வதற்கும் மிகவும் முக்கியமான வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
வைட்டமின் டி நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது, இது கால்சியம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. உடலில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால், கால்சியத்தை உடலால் உறிஞ்ச முடியாமல், எலும்புகள் வலுவிழக்கத் தொடங்கும்
பல நோய்களிலிருந்து உடலைப் பாதுகாப்பதில் வைட்டமின் ஈ முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஈ உடலின் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்புக்கு உதவுகிறது
பொறுப்பு துறப்பு: இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை