MST பற்றி உங்களுக்கு தெரியுமா?.. இதன் அவசியம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
இந்தியாவில் மொபைல் கட்டண முறைக்கு, சாம்சங் தான் முன்னோடியாக இருந்துள்ளது. இந்தியாவில் UPI கட்டண பயன்முறை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே சாம்சங் பே பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதித்தது.
சாம்சங் நீண்ட காலமாக மொபைல் கட்டண சேவையை வழங்க MST தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. MST அல்லது Magnetic Secure Transmission என்பது ஒரு தொழில்நுட்பமாகும், இது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளிலும் காணப்படுகிறது, இது முக்கியமான தரவுகளை ஒரு காந்த துண்டுகளில் பாதுகாப்பாக சேமிக்கிறது.
சாம்சங் தொலைபேசிகளில் இருக்கும் MST தொழில்நுட்பத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் இது வழக்கமான PoS கட்டண இயந்திரங்களுடனும் (magstripe reader) பயன்படுத்தப்படலாம். இது பொதுவாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. MST தொழில்நுட்பம் சாம்சங்கின் முதன்மை ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கிறது என்பதையும் நினைவில் வச்சிக்கோங்க.
Magnetic Secure Transmission தொழில்நுட்பத்துடன் கூடிய சாம்சங் ஸ்மார்ட்போன் ஒரு கிரெடிட் அட்டையைப் பயன்படுத்தப்படும்போது உருவாகும் சிக்னலைப் போன்றே ஒரு மாதிரியான மேக்னெட்டிக் சிக்னலை உருவாக்குகிறது. இந்த சிக்னல் பின்னர் கார்டு ரீடருக்கு அனுப்பப்படும், இது கைரேகை சென்சார் போன்று தொலைபேசியில் இருக்கும் பயோமெட்ரிக் சென்சார் மூலம் அங்கீகரிக்கப்படலாம்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பல கார்டுகளை எடுத்துச் செல்வதற்கான தேவை உங்களுக்கு இருக்காது. பணம் எடுத்துச் செல்லும்போது அது தொலைந்துப் போகும் என்று கவலையும் உங்களுக்கு இருக்காது. ஏனெனில் ஒரு தொலைபேசியில் பல கார்டுகளைச் சேமிக்க முடியும், மேலும் ஒருவர் பணம் செலுத்த டிஜிட்டல் கார்டுகளையும் தேர்வு செய்து பயன்படுத்தலாம். உண்மையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி S21 அல்ட்ரா போனும் இந்தியாவில் இந்த அம்சத்தை ஆதரிக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது.