பிரேதசாப தோஷம் என்றால் என்ன? யாருக்கு பாதிப்பு ஏற்படும்? விமோசனங்களும் பரிகாரங்களும்!

Sat, 29 Jun 2024-3:34 pm,

ஜோதிடத்தில் லக்னத்தில் ராகு, 5ல் சூரியனும் சனியும் இருப்பது ,7ம் லக்னத்தில் சந்திரன் நீச்சமடைந்திருப்பது,12ல் குரு அமைத்து இருந்தால், அந்த ஜாதகருக்கு பிரேதசாப தோஷம் இருப்பதாக கூறப்படுகிறது 

இறந்தவரின் சடலத்தை வைத்து கொண்டு அவரை இழிவாக பேசுவது பாவம், இந்த பாவத்தை செய்தவர்களுக்கு பிரேதசாப தோஷம் ஏற்படும். 

இறந்தவர்களின் உறவினர்களை சடலத்தை பார்க்க விடாமல் தடுப்பது சாப தோஷத்தை ஏற்படுத்தும். அதேபோல, பிணத்தை தாண்டுவதும் பிரேத சாப தோஷத்தைக் கொடுக்கும்.  

ஈமச் சடங்குகளை செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் பிரேதசாப தோஷம் ஏற்படும். 

பிரேத சாப தோஷத்தால், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆயுள் குறையும். குடும்பத்தில் அகால மரணங்கள் ஏற்படும்

வீட்டில் அவ்வப்போது யாகம் செய்வது, பூஜைகளை தொடர்ந்து செய்து வருவது இந்த சாபத்தின் வீரியத்தைக் குறைக்கும்

ஒருவரின் ஜாதகத்தில் பிரேதசாப தோஷம் இருப்பது தெரிந்தால், அவர் இறந்தவர்களின் ஈமக் காரியங்களில் கலந்துக் கொண்டு உதவி செய்ய வேண்டும். பண வசதி இருந்தால், வசதியில்லாதவர்களின் இறுதிச்சடங்கிற்கு உதவி செய்ய வேண்டும்

கர்மவினைகளை தீர்த்து அழிக்கும் கடவுளாக இருக்கும் சம்ஹார மூர்த்தியான சிவபெருமானை வழிபடுவது, தோஷங்களைப் போக்கும். அதிலும், பிள்ளையாரையே பிள்ளையாக வைத்துள்ளவரும், அப்பனுக்கே பாடம் சொன்ன குமரனுக்கு தந்தையாகவும் இருக்கும் சிவ பரிவாரத்தை வணங்குவது சாபத்திற்கு நிவாரணமாக இருக்கும்  

காக்கும் கடவுளான விஷ்ணுவின் ரூபங்களை மனதார வழிபட்டால், பிரேதசாப தோஷ விமோசனம் கிடைக்கும்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link