சன்ரூஃப் கார் வாங்கினா மட்டும் போதாது... இந்த விஷயம் தெரியலைன்னா சிக்கல்ல மாட்டிப்பீங்க! கவனம்...

Sat, 12 Oct 2024-7:20 pm,

சன்ரூஃப் கார் மிகவும் ஸ்டைலானது மட்டுமல்ல, காரில் சென்றுக் கொண்டிருக்கும்போதே, வானத்தையும், இயற்கையையும் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு ஒரு வரம்...

குழந்தைகள் முதல் இளைஞர்கள், முதியவர்கள் என பலருக்கும் வேகமாக செல்லும்போது வானத்தை பார்க்கும் ஆவல் இருப்பது இயல்பு. எனவே, சிலர் வேகமாக காரை ஓட்டும் போது சன்ரூஃப் ஜன்னலை திறக்கின்றனர். 

வாகனம் வேகமாக சென்றுக் கொண்டிருக்கும்போது, சன்ரூஃப் திறக்கும் போது அது என்ன பிர்ச்சனைகளைக் கொடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?  

சன்ரூஃப் திறந்திருக்கும் போது, ​​காரின் வேகம் மணிக்கு 70-80 கிமீக்கு மேல் அதிகரிக்கக்கூடாது. இது அதிக வேகத்தில் காற்றின் அழுத்தத்தை அதிகரிப்பதால், ஓட்டுநருக்கு பிரச்சனையைக் கொடுக்கும். அதிக சப்தம் ஓட்டுநரை நிலைகுலையச் செய்யும் 

நெடுஞ்சாலையிலோ அல்லது அதிவேக சாலையிலோ காரின் மேற்கூரையைத் திறந்து வைப்பதைத் தவிர்க்கவும். அதிவேகமாக வாகனம் செல்லும் போது, கூரை திறந்திருப்பது பாதுகாப்பானது அல்ல  

பலத்த காற்று, மழை அல்லது மாசு அதிகமாக இருக்கும் போது, ​​சன்ரூஃப்பை மூடி வைப்பது நல்லது, இதனால் வாகனத்தின் உள்ளே இருக்கும் சூழல் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

உங்கள் எஸ்யூவியின் சன்ரூஃப் கூரையைத் திறக்கும் போதெல்லாம், உங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது, மேலும் சாலை நிலைமைகளை மனதில் வைத்துக்கொள்வது அவசியமானது

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link