நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்த இந்த நடிகரின் கருத்து என்னவா இருக்கும் ?
யாரடி நீ மோகினியில் நயன்தாராவுடன் நடித்த கார்த்திக் குமாரின் பதிவியில் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதை பின்வரும் பத்தியில் முழுமையாகப் பார்க்கலாம்.
யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாரவுடன் இணைந்து நடித்த நடிகர் கார்த்திக் குமார் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நயன்தாராவின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் திருமண ஆவணப்படங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து நெட்ஃப்லிக்ஸில் பியாண்ட் தி ஃபேரி டேல் என்ற பெயரில் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இது பெரிதாக மக்களிடம் சென்றடையவில்லை. இருந்தாலும் அது அனைவருக்கும் தெரியப்படுத்தச் சிறுத் தொகுப்பிலான ஷாட்ஸ் வெளியாகி மக்களின் ஆர்வத்தைத் தூண்டி வருகிறது.
தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தின் 3 வினாடி கொண்ட bts காட்சிகள் வெளியாகியிருந்தன. இதற்கு நடிகர் தனுஷ் எதிர்ப்பு தெரிவித்து ரூ 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார் என்று நயன்தாரா பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கான உரியப் பதிலை தனுஷ் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனுஷுடன் நடித்த அனுபமா, பார்வதி நாயர், நஸ்ரியா, ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி பெயர் நயன்தாரா காட்டப்பட்டுள்ளார். நயன்தாரா குறித்து நடிகை ராதிகா, நாகார்ஜுனா, அட்லி உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்கள் பாராட்டியிருந்தனர்.
நடிகர் கார்த்திக் குமார் இன்ஸ்டாவில் நயன்தாராவின் அறிக்கையைப் பதிவிட்டு ‘கடினமான சூழலில் தைரியமாகச் செயல்பட்டது குறித்து நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.