சந்திர கிரகணத்திற்கு பின் தானம் செய்தால் என்ன பலன்? ஜோதிட பரிகாரங்கள்
நாளை (அக்டோபர் 28, சனிக்கிழமை ) நள்ளிரவில் சந்திரன் பூமியின் மங்கலான நிழல் வட்டத்தில் நுழைந்தாலும் (பெனம்ப்ரல் சந்திர கிரகணம்), பூமியின் நிழலில் (அம்ப்ரல் சந்திர கிரகணம்) அக்டோபர் 29 ஆம் தேதி அதிகாலையில் நுழைகிறது.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைக்கு இடையில் வரும் நள்ளிரவில் இந்த கிரகணம் இந்தியா முழுவதும் தெரியும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இந்த கிரகணத்தின் ‘அம்ப்ரல் கட்டம்’, அதாவது நிழல் சந்திரனின் மீது விழுவது, ஞாயிறன்று (அக்டோபர் 29) அன்று அதிகாலை 01:05 மணிக்குத் தொடங்கி 02:24 மணி வரை நிகழும் என்றும் அரசு அறிக்கை கூறுகிறது.
நாளை சந்திர கிரகணத்தின்போது கோவில்கள் அனைத்தும் மூடப்படும். கிரகண சுத்திக்குப் பிறகு ஆலயங்கள் திறக்கப்படும். திருப்பதி கோவிலில் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுகிறது
கிரகணத்துக்கு பிறகு வெள்ளை பொருட்களை தானம் செய்தால் பணம் வந்து சேரும். பல கடுமையான பிரச்சனைகளுக்கு கிடைக்கும். இது தவிர, புகழ், பலம், மனவலிமை ஆகியவையும் வந்து சேரும். எந்த பொருளை தானம் செய்தால் என்ன கிடைக்கும்? தெரிந்துக் கொள்ளுங்கள்
சந்திர கிரகணத்திற்குப் பிறகு சர்க்கரை தானம் செய்வதால், இஷ்ட தெய்வங்களும், தெய்வங்களும் மகிழ்ச்சியடைந்து அருள்பாலிக்கின்றனர். எப்போதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் வாழலாம்
சந்திர கிரகணத்திற்குப் பிறகு வெள்ளியை தானம் செய்வதும் நல்லது. வெள்ளியை தானம் செய்வதன் மூலம், கூர்மையான அறிவு, புத்திசாலித்தனம், செல்வம் மற்றும் செழிப்பு என சகல செல்வங்களும் கிடைக்கும்
அரிசி சந்திரனுடன் தொடர்புடையது. மங்கள வேலைகளிலும் வழிபாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சந்திர கிரகணத்திற்கு பிறகு அரிசி தானம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
சந்திர கிரகணத்திற்குப் பிறகு பால் தானம் செய்வதால் அன்னை லட்சுமி மகிழ்ச்சியடைவார். சந்திரனுடன் தொடர்புடைய பாலை, சந்திர கிரகணத்திற்கு பால் தானம் செய்வதால் ஜாதகத்தில் சந்திரன் வலுப்பெறுவதோடு செல்வம், புகழ், மன அமைதி கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை