WhatsApp-யை ஏன் பயன்படுத்தக்கூடாது? என்ன ஆபத்து? மாற்றாக எதை பயன்படுத்தலாம்?

Fri, 08 Jan 2021-6:27 pm,

கடந்த சில நாட்களாகவே நீங்கள் சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப்பின் புதிய விதிமுறைகள் குறித்த விவரங்களைப் பார்த்திருக்கலாம். உங்கள் வாட்ஸ்அப்  பயன்பாட்டைத் திறந்த உடனேயே உங்களுக்கு ஒரு அறிவிப்பு காண்பிக்கப்பட்டிருக்கும். அதில், வாட்ஸ்அப் உங்களின் தனிப்பட்ட தகவல்களை அதன் விளம்பர  நோக்கங்களுக்காக பயன்படுத்தலாமா என்று அனுமதி கேட்கும். அனுமதி கொடுத்தால் தான் நீங்கள் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்தலாம். இல்லை என்றால் பயன்படுத்த முடியாது. 

சரி வாட்ஸ்அப் அப்படி என்னென்ன தகவல்களைப் பயன்படுத்த போகிறது? உங்கள் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, தொடர்புகள், இடம், சாதன ID, பயனர் ID, விளம்பரத் தரவு, கொள்முதல் வரலாறு, தயாரிப்பு தொடர்பு, கட்டணத் தகவல், செயலிழப்பு தரவு, செயல்திறன் தரவு, பிற கண்டறியும் தரவு, வாடிக்கையாளர் ஆதரவு, தயாரிப்பு தொடர்பு, பிற பயனர் தகவல்கள், உள்ளடக்கம், மெட்டாடேட்டா போன்ற தகவல்கள் அனைத்தையும் பேஸ்புக் நிறுவனம் உங்களிடம் இருந்து சேகரிக்கிறது.

இவ்வளவையும் கொடுக்கும் போது உங்களுக்கு Privacy அதாவது தனியுரிமை என்று எதுவும் இருக்காது. சரி, அப்போ  வாட்ஸ்அப் க்கு மாற்றாக வேறு  என்ன பயன்படுத்தலாம். இதற்கு மாற்றாக டெலிகிராம், சிக்னல் போன்ற மெசேஜிங் பயன்பாடுகளைப் பயன்படுத்தலாம். சரி, இந்த பயன்பாடுகள் நம் தரவுகள் எதையும் பயன்படுத்தவில்லையா?  

டெலிகிராமைப் பொறுத்தவரை,  உங்கள் பெயர், தொலைபேசி எண், தொடர்புகள், பயனர் ஐடி முதலிய தகவல்கள் மட்டுமே சேகரிக்கப்படும். ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் போல இல்லை.

ஆனால், சிக்னல் பயன்பாட்டில், உங்கள் மொபைல் நம்பர் உட்பட எந்த தகவலுமே சேகரிக்கப்படாது. அது மட்டுமில்லாமல் இது இலவசமாகவும் கிடைக்கிறது. டெஸ்லா  உரிமையாளர் எலோன் மஸ்க் உட்பட பலரும் SIGNAL ஆப் பயன்படுத்த சொல்லி பரிந்துரைத்து வருகின்றனர். இதனால் சமூக ஊடங்களில் SIGNAL உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link