‘லியோ’ பட வெற்றி விழாவை எப்போது தொலைக்காட்சியில் காணலாம்?
)
விஜய் நடிப்பில் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியான படம், லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
)
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா பட ரிலீஸிற்கு முன்னர் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களினால் அது தடைப்பட்டு போனது. லியோ படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் வெற்றி விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இதில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அர்ஜுன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
)
இந்த விழாவில் நடிகை த்ரிஷா சிகப்பு நிற புடவையில் வருகை தந்தார். லியோ படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக சத்யா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
விஜய், லியோ வெற்றி விழாவில் வழக்கம் போல தனது குட்டி ஸ்டோரியை கூறினார். ரசிகர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.
நடிகர் விஜய் நேற்றைய விழாவில் பேசிய சில விஷயங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. குறிப்பாக, “ஒரு காட்டில் சிங்கம், புலி, காக்கா, கழுகு..” என இவர் கூறிய கதைக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
லியோ வெற்றி விழாவை ஒளிபரப்பும் உரிமை, பிரபல தொலைக்காட்சி ஒன்றிடம் உள்ளது.
அந்த பிரபல தொலைக்காட்சி, லியோ படத்தின் வெற்றிவிழாவை வரும் தீபாவளிக்கு டிவியில் ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.