புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்? அரசின் முக்கிய தகவல்
தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகளில் மிக குறைந்த விலைகளில் இலவச அரிசு, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய், சீரகம் உள்ளிட்ட பல பொருட்கள் கொடுக்கப்படுகின்றன.
சந்தை மதிப்புடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசின் நியாய விலைக் கடைகளில் மலிவு விலையில் பொருட்கள் கிடைகின்றன. இதனை ஏழை, எளிய மக்கள் வாங்கி பயன்பெறுகின்றனர். அவரவர் பொருளாதார வசதிக்கு ஏற்ப ரேஷன் கார்டுகள் பல்வேறு வகைகளில் கொடுக்கப்படுகிறது.
ஒருவேளை நீங்கள் ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என நினைத்தால் ஆன்லைனிலேயே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் தங்கியிருக்கும் வீட்டு முகவரி தொடர்பான ஆவணம், வாடகை வீடு என்றால் வாடகை ஒப்பந்தம் மற்றும் மின் கட்டண பில், ஆதார் கார்டு, சிலிண்டர் கனெக்ஷன் விவரம் ஆகியவை ஆவணங்கள் தேவை.
இவற்றை வைத்து ஆன்லைனில் புதிய ரேஷன் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பித்துவிடலாம். புதிதாக திருமணமானவர்கள் என்றால் தம்பதிகள் இருவரும் ஏற்கனவே ரேஷன் கார்டில் இருக்கும் பெயர்களை நீக்கிவிட்டு, பெயர் நீக்கப்பட்ட சான்றுகளையும் கூடுதலாக இணைக்க வேண்டும்.
சிலர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பல மாதங்கள் காத்திருப்பதாக கூறுகின்றனர். இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி 2024, ஜூன் 15 ஆம் தேதி வரை ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் முகவரி சரிபார்க்கப்பட்டு வருகிறது.
அதில் சரியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. ஜூன் 15 ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பித்தவர்கள் அடுத்த பேட்ஜில் ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்புள்ளது.
ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் எதற்காக நிராகரிக்கப்பட்டது என்ற காரணத்தை அறிந்து மீண்டும் விண்ணப்பித்தால் புதிய ரேஷன் கார்டு கிடைக்கும்.