750 ரூபாய் கேஷ்பேக் சலுகைகளை வழங்கும்BHIM App! எப்படி க்ளைம் செய்வது? யாருக்கு கிடையாது?

Thu, 08 Feb 2024-5:08 pm,

கேஷ்பேக் சலுகைகள் மூலம் அதிகமான பயனர்களை பிளாட்ஃபார்மிற்கு ஈர்க்கும் விதமாக பிம் ஏப் இந்த கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. பயனர் தளத்தைப் பெறுவதற்கு Google Pay ஆரம்பத்தில் பின்பற்றிய உத்தி இது...  

 

2 வெவ்வேறு கேஷ்பேக் சலுகைகள் இணைந்து ரூ.750 பணத்தைத் தரும் இந்த கேஷ்பேக் சலுகையுடன் கூடுதலாக 1 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. 

பிளாட் ரூ.150 + ரூ.600 கேஷ்பேக் சலுகைகள், எப்படி க்ளைம் செய்வது?

உணவருந்தும்போதும், பயணம் செய்யும்போதும் BHIM செயலி ரூ.150 பிளாட் கேஷ்பேக் ஆஃபரை வழங்குகிறது. BHIM செயலி மூலம் செய்யப்படும் உணவு மற்றும் பயணச் செலவுகளுக்காக பயனர்கள் ரூ.100க்கு அதிகமான பரிவர்த்தனைகளுக்கு 30 ரூபாய் கேஷ்பேக்கைப் பெறுவார்கள்.

இந்தச் சலுகையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவுகள், கேப் சவாரிகள் மற்றும் வணிகர் UPI QR குறியீடு மூலம் செலுத்தப்படும் உணவகக் கட்டணங்கள் உட்பட பலவிதமான செலவுகள் அடங்கும். அதிகபட்சமாக ரூ.150 கேஷ்பேக் வரம்பு உண்டு

ரூ.600 கேஷ்பேக் சலுகை உள்ளது. ரூபே கிரெடிட் கார்டுதாரர்கள் BHIM செயலியுடன் இணைப்பதன் மூலம் இந்த ஆஃபரை பெறலாம். இது அனைத்து வணிகர் UPI பேமெண்ட்டுகளிலும் ரூ.600 கேஷ்பேக் ரிவார்டை அன்லாக் செய்ய பயனர்களை அனுமதிக்கும். 

இந்தச் சலுகையில், தலா ரூ. 100க்கு அதிகமான முதல் மூன்று பரிவர்த்தனைகளுக்கு ரூ. 100 கேஷ்பேக், அதன்பின் ஒவ்வொரு மாதமும் ரூ. 200க்கு மேல் 10 பரிவர்த்தனைகளுக்கு ரூ.30 கேஷ்பேக் ஆகியவை அடங்கும். இந்த அனைத்து பரிவர்த்தனைகளையும் நீங்கள் செய்தால் மட்டுமே இந்த சலுகைகள் அனைத்தும் சேர்த்து மொத்தமாக ரூ.600 கேஷ்பேக் கிடைக்கும்  

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி உட்பட அனைத்து எரிபொருள் கட்டணங்களுக்கும் 1 சதவீத கேஷ்பேக்கை பயனர்களுக்கு வழங்கும் BHIMaApp உர்ஜா 1 சதவீத திட்டமும் உண்டு. இது தவிர, பரிவர்த்தனை 100 ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு பில் போன்ற கட்டணங்களை BHIM செயலி மூலம் செலுத்தினால் நேரடியாக கேஷ்பேக் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்

BHIM செயலியில் இந்த கேஷ்பேக் சலுகைகள் மார்ச் 31, 2024 வரை கிடைக்கும். இதன் அடிப்படையில், BHIM செயலியைப் பயன்படுத்தி மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கேஷ்பேக் ஆஃபர்களையும் பெறலாம்

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடபபட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link