தமிழ் பேசும் 8 வெளிநாடுகள்!! யாரெல்லாம் லிஸ்ட்ல இருக்காங்க பாருங்க..
தென் ஆப்ரிக்கா:
சில தமிழர்கள் வேலைக்காக தென் ஆப்ரிக்காவிற்கு 19ஆம் நூற்றாண்டுகளில் குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது. அவர்கள், ஆங்கிலேயர்களால் அங்கு வேலைக்காக அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். அதனால், இப்போது அங்கிருக்கும் டர்பன் என்ற இடத்தில் தமிழர்கள் நிறைய பேர் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா:
அமெரிக்காவின் நியூ யார்க், நியூ ஜெர்சி, கலிஃபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட இடங்களில் தமிழ் பேசுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனராம். இங்கு அடிக்கடி, தமிழ் விழாக்கள் நடத்தப்படுமாம். இங்கிருக்கும் தமிழ் கோவில்களை பராமரிக்கவும் சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனவாம்.
ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய இடங்களில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் பேர் இருக்கின்றனராம். இந்தியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய இடங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் இங்கு அதிகம் பேர் இருக்கின்றனராம்.
இங்கிலாந்து:
இங்கிலாந்தில் (UK) தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனராம். இங்கிருக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
கனடா:
கனடா நாட்டில், டொரோண்டோ மற்றும் மாண்ட்ரியல் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனராம். இங்கு பெரும்பாலும் இலங்கை தமிழர்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
மலேசியா:
ஆங்கிலேயே ஆட்சி காலத்தில், தமிழ் பேசும் மக்கள் பலர் மலேசியாவிற்கு குடிபெயர்ந்திருக்கின்றனர். அவர்களின் வம்சாவளியில் வந்தவர்கள் இன்னும் அங்கு வசித்து வருகின்றனர். இங்கு, சில பள்ளிகள் கூட தமிழ் பெயரில் இயங்கி வருகிறதாம்.
சிங்கப்பூர்:
தமிழர்கள் அதிகம் பேர் வாழும் இன்னொரு நாடு, சிங்கப்பூர். அங்கிருக்கும் 4 அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாக இருக்கிறது தமிழ். அது மட்டுமன்றி, அந்த நாட்டின் அரசாங்கமே தமிழ் மொழியை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கை:
இலங்கையில், சிங்கள மொழிக்கு அடுத்து பேசப்படும் மொழியாக இருக்கிறது தமிழ். இங்கு, தமிழ் பேசும் மக்கள் அதிகம் பேர் இருக்கின்றனர்.