தொப்பை கொழுப்பு வெண்ணையா உருக, இந்த எண்ணெயில் சமையல் செய்தால் போதும்
டயட்டில் சில உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். எண்ணெய் பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கிறது என்ற கருத்து உள்ளது. எனினும், உணவில் சிறிது எண்ணெய் சேர்த்துக்கொள்வது உடல் எடையை குறைக்கவும் தொப்பை கொழுப்பை கரைக்கவும் (Belly Fat Reeduction) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல் எடையை குறைக்க நம் உண்வைல் சேத்துக்கொள்ளக்கூடிய எண்ணெய் வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்
நல்லெண்ணெயில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் போதுமான அளவு நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த எண்ணெயை தொடர்ந்து உட்கொள்வது உடலில் கொழுப்பு எரியும் செயல்முறையை துரிதப்படுத்த உதவுகிறது. நல்லெண்ணெயில் லிக்ரான் காணப்படுகிறது. இது கொழுப்பைக் குறைப்பதற்கும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் நன்மை பயக்கும். உடல் எடையை குறைக்க, நல்லெண்ணெயை சமையலில் பயன்படுத்தலாம்.
கடுகு எண்ணெய் கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். கடுகு எண்ணெயில் உள்ள பண்புகள், உடலில் கூடுதல் கொழுப்பு சேர்வதைத் தடுக்க உதவுகிறது. மேலும் கொழுப்பை எரிப்பதை துரிதப்படுத்துவதில் இது நன்மை பயக்கும்.
ஆலிவ் எண்ணெய் உணவில் மட்டுமல்ல, பல கடுமையான பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பண்புகள் உடலில் சேரும் கூடுதல் கொழுப்பை குறைக்க உதவுகின்றன. ஆலிவ் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவை உண்பது, மீண்டும் பசி எடுப்பதைத் தடுக்கிறது, எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தொப்பையை குறைக்க உதவுகின்றன. தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் மற்றும் கேப்ரிக் அமிலம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது உடலில் சேரும் கூடுதல் கொழுப்பைக் குறைக்கவும், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
உடல் எடையை குறைக்க, உணவில் பாதாம், நல்லெண்ணெய் மற்றும் சூரியகாந்தி போன்ற கொட்டைகள் மற்றும் விதைகளின் எண்ணெயை பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. அதில் உள்ள பண்புகள் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகின்றன.
உடல் எடையை குறைக்க, உணவில் தேவையான மாற்றங்களுடன், வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதற்கு மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, தொடர்ந்து 30 முதல் 40 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.