இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் இருப்பது ‘இந்த’ மாநிலத்தில்தான்!! எது தெரியுமா?

Sun, 20 Oct 2024-12:14 pm,

கோவா:

கோவாவில் 88.7% பேர் படித்தவர்களாக இருக்கிறார்களாம். இங்கு மக்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

உத்தரகாண்ட்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுமார் 87.6% பேர் படித்தவர்களாக இருக்கின்றனர். இங்கு, பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் வருடா வருடம் கொண்டு வரப்பட்டு வருகின்றன. 

பஞ்சாப்: பஞ்சாப்பில் 76.1% பேர் படித்தவர்களாக இருக்கின்றனர். இங்கு, பள்ளி படிப்பிற்கு பிறகு மேற்படிப்புகளை மேம்படுத்துவதற்கான வேலைகள் நடைப்பெற்று வருகின்றன. 

ஹிமாச்சல பிரதேசம்:

ஹிமாச்சல பிரதேசத்தில், 83.8 சதவீதம் பேர் படித்தவர்களாக இருக்கின்றனர். இங்கு, படிப்பதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான வேலைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிராவில் 82.3% பேர் படித்தவர்களாக இருக்கின்றனர். இங்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழ்நாடு:

தமிழகத்தில், 80.1% பேர் படித்தவர்களாக இருக்கின்றனர். இங்கு, பள்ளி, கல்லூரி படிப்பை தாண்டி டிப்ளமோ மற்றும் இதர திறன் படிப்புகளும் அதிகமாக மக்களால் படிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

டெல்லி:

டெல்லியில், பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். இங்கு 86.2% பேர் படித்தவர்களாக இருக்கின்றனராம். 

கேரளா:

இந்தியாவிலேயே அதிகம் படிப்பறிவு கொண்டவர்கள் இருக்கும் மாநிலமாக இருக்கிறது கேரளா இங்கு இருப்பவர்களுள், 96.2% படிப்பறிவு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link